Translate Tamil to any languages.

வியாழன், 25 ஆகஸ்ட், 2016

கடவுள் எதை வழிகாட்டுவார்?


பயின்றவர்... முயன்றவர்...
வென்றுவிடுகிறார்...
பயிலாதவர்... முயலாதவர்...
தோற்றுவிடுகிறார்...
கண்ணால் கண்டவர்
கண்ட பின்னர் சொன்ன
உண்மை இது!
"தான் வென்றது என்னவோ
தனது நல்ல நேரம்" என்கிறார்
வெற்றி கண்டவர்...
"தான் தோற்றது என்னவோ
தனது கெட்ட நேரம்" என்கிறார்
தோல்வி கண்டவர்...
கண் மூடித் திறப்பதற்குள்
கரைகின்ற நேரமோ
"பொய்! பொய்! பொய்!" என்கிறதே!
கடந்து போன நேரம் கேட்கிறது
எனது நேரத்தில் - நீ
என்ன செய்தாய் என்று...
புதிதாய் வந்த நேரம் கேட்கிறது
எனது நேரத்தில் - நீ
என்ன செய்ய இருக்கிறாய் என்று...
ஆனால், மனிதனும்
ஏதோ எண்ணிப் பார்க்கிறான்...
அப்படி இருந்தும்
நேரம் விரைவாகக் கரைகிறது...
இதையுணர்ந்த அறிஞர் ஒருவரே
"நேரம் பொன்னானது - அதை
ஒரு பொழுதும் வீணடிக்காதே!" என்று
சொல்லிவைத்தார் போலும்!
நேர முகாமைத்துவம்
சரியாக பேணும் ஒருவராலேயே
உலகை வெல்ல முடியுமென
நானும் நம்புகிறேன் - அதைத் தான்
பகலவனையும் நிலவவளையும் வைத்து
பகலையும் இரவையும் ஆக்கி
நேர முகாமைத்துவம் படிப்பிக்கின்ற
கடவுளும் வழிகாட்டுவாரோ?!

8 கருத்துகள் :

  1. எல்லாம் சரி ,கடைசி வரி சொதப்பல் :)

    பதிலளிநீக்கு
  2. கடவுளுக்கே தண்ணி காட்டுவான் என் தெரு பூசாரி

    பதிலளிநீக்கு
  3. 'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
    வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
    தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
    கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே‘
    என்ற பாடலுடன்
    கடவுள் உள்ளத்திலே இருக்கிறார், அவர் வழிகாட்டாமல் விடுவாரா?
    என்றவாறு
    the poles "colonelpaaganesanvsm.blogspot.com"
    கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள்
    என்கின்ற வலைப்பூ ஆசிரியர் கருத்துப் பதிவு செய்திருந்தார். எனது தவறுதலால் அது அழிந்து விட்டது. அதனைத் தங்களுக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!