Translate Tamil to any languages.

ஞாயிறு, 10 ஜூலை, 2016

இவங்க மூடினால் தான், அவங்க நிறுத்துவாங்க

இவங்க
அவங்க
குடிதண்ணீர் விற்போர்
குடிகளைக் கெடுப்பவங்க
குறையாடை அணிவோர்
குமரிகளைக் கெடுப்பவங்க


1)
குடிதண்ணீர் விற்பவரும் மூடுவதாயில்லை
குடிகளைக் கெடுப்பவரும் நிறுத்துவதாயில்லை
                                                (குடி)

குடிதண்ணீர் விற்போருக்குத் தடையில்லை
தடையென்றால் நம்ம அரசுக்கு வருவாயில்லை
சுவைப்பட்டோர் குடிக்காமல் இருந்ததில்லை
குடித்தவரோ தன் குடியைக் கெடுக்காமலில்லை
                                                (குடி)

படித்தோரும் படிக்காதோரும் அறியாமலில்லை
குடித்தோரும் குடிக்காதோரும் படிக்காமலில்லை
குடித்தவரும் துடித்துச் சாக வாழ்வுமில்லை
நாட்டவர் சாக நம்ம அரசும் பொருட்படுத்தவில்லை
                                                (குடி)

நடுவழியே வீழ்ந்தவரும் குடிக்காமலில்லை
வீழ்ந்தவரின் உடையுரிய உணர்வுமில்லை
பார்த்தோரும் சிரித்தோடத் துயரமில்லை
குடும்பத்தார் காவிச் செல்லவும் விழிக்கவில்லை
                                                (குடி)

2)
குறையாடை உடுப்பவரும் மூடுவதாயில்லை
குமரிகளைக் கெடுப்பவரும் நிறுத்துவதாயில்லை
                                                (குறை)

துணிமணி விற்போரில் குற்றமில்லை
எட்டுப்பத்து முளச்சேலைக்கும் குறைவுமில்லை
வேண்டுவோர் வேண்டுவதிலும் நிறைவுமில்லை
வேண்டியதை மூடியுடுக்க விரும்புவதில்லை
                                                (குறை)

குறையாடை உடுப்போரால் ஒழுக்கமில்லை
ஊர்தி ஓட்டுநரின் பார்வையும் சரியில்லை
வழி நெடுக மோதலும் சாவும் ஓயவுமில்லை
காவற்றுறையும் கண்காணித்தும் தீர்வுமில்லை
                                                (குறை)

குறையாடைக் கோலங்கள் ஈர்க்காமலில்லை
ஈர்த்த கோலமும் தூண்டிய உணர்வும் தடுப்பாரில்லை
பார்த்த மிருகமும் கெடுக்க முயலும் நோக்குவாரில்லை
கருக்கலைப்பும் குமரிகள் சாவும் நிறுத்துவாரில்லை
                                                (குறை)

3)
முடிவாக (மக்கள் சிந்தனைக்கு):

உழைப்பதும் குடிப்பதும் வாழ்வானால்
குடும்பத்தார் அழிந்துபோக வழியானால்
குடித்ததும் குடியை அழிப்பதும் தொழிலானால்
புகை, குடிதண்ணீர் கடைகளை மூடாது போனால்
நம் (தமிழ்) இனம் அழியாதிருக்க ஏது மருந்து?

குறையுடுப்பு அணிவோரும் - தம்
உடலை முழுமையாக மறைக்க
முடியாமல் போனால் பாரும்
குமரிகளைக் கெடுக்கவரும் மிருகவுணர்வை
தடுத்து நிறுத்த ஏது மருந்து?

6 கருத்துகள் :

  1. நச் அடி. இதற்கு மருந்தே இல்லை. உண்மைதான்.

    பதிலளிநீக்கு
  2. சவுக்கடியான வார்த்தைகள் நண்பரே

    பதிலளிநீக்கு
  3. ஒதுங்கும்போக்கையும் போலீஸ் பயத்தையும் போக்கினால் மருந்து கிடைக்கும் நண்பரே...

    பதிலளிநீக்கு
  4. சரியான கவிதை...
    வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  5. காலத்திற்கு ஏற்ற கவிதை, இதை படித்து விட்டு ” எங்கள் இஷ்டம்” நீ யார் கேட்பதற்கு என்று கொடி பிடித்து விடப்போகிறார்கள்

    பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!