Translate Tamil to any languages.

செவ்வாய், 5 ஏப்ரல், 2016

உழவர் கதை உரைப்போம்!


வெட்டை வெளி வயலில்
பட்ட மரங்களும் இருக்கும்
கெட்ட பயிர்களும் இருக்கும்
முட்ட முள்களும் இருக்கும்
வெட்டிப் பண்படுத்துவார் உழவர்!

சுட்டெரிக்கும் பகலவனை நம்பி
கொட்டும்மழைக்கு வானத்தை நம்பி
நட்டபயிர்வாழக் காற்றை நம்பி
பட்டிடாமல் மண்ணை நம்பி
இட்டிடுவார் பயிர்களை உழவர்!

எட்டாத் தொலைவுப் பகலவனும்
கிட்டாத மழைக்கு வானமும்
கெட்டிடாப் பயிருக்குக் காற்றும்
பட்டிடாத நிலைக்கு மண்ணும் என
இட்டபயிரோடு போராடுவார் உழவர்!

பட்டப் பகலிலும் சரி
நட்டநடு இரவிலும் சரி
கெட்டிடா வாழ்விலும் சரி
ஒட்டாத வயிறு நிறைய
கிட்டவரும் உழவரின் உணவே!

முட்ட மூக்குமுட்ட எப்போதும்
விட்டு வைக்காமல் உண்போருக்கும்
பட்டகடன் எல்லாம் வெட்டி
கிட்டநம் நாடு உயரவே
சட்டெனவுதவும் உழவரின் அறுவடையே!


18 கருத்துகள் :

  1. கடும் வெய்யிலிலும் அடை மழையிலும் உழவர் கஷ்டப்பட்டால் தான் நாம் கவவையின்றி நிழலில் அமர்ந்து வயிராற உணவு உண்ண முடிகிறது. கவிதை அருமை

    பதிலளிநீக்கு
  2. அருமையான கவிதை வரிகள் நண்பரே வாழ்த்துகள் தொடரட்டும் கவிதை மழை.

    பதிலளிநீக்கு
  3. நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள் நண்பரே!

    பதிலளிநீக்கு
  4. அற்புதமான கவிதை.மேலும் மேலும் மலரட்டும்.வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. உழவர் கவிதை அருமை நண்பரே
    கவிதைகள் விதையுங்கள்
    நாளை மரமாகும் ....

    பதிலளிநீக்கு
  6. அருமையான உழவர் கவிதை ,பகிர்வுக்கு நன்றிகள்

    பதிலளிநீக்கு
  7. மண்ணின் பெருமை பேசும் கவிதை கண்டு மகிழ்ந்தேன்.

    பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!