Translate Tamil to any languages.

சனி, 20 பிப்ரவரி, 2016

உலகாளுவோம் உயிர்த் தமிழால்...

21/02/2016 அன்று தாய்மொழி உரிமை மாநாடு, விரிப்புக் கீழே தரப்படுகிறது.

மேற்காணும் நிகழ்வில் கலந்துகொள்ள அழைப்புக் கிடைத்தும் என்னால் பங்கெடுக்க இயலவில்லை. தாங்கள் எல்லோரும் கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றேன்.




தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கப் பொதுச் செயலாளர் செம்மொழிப் போராளி கவிஞர் க.ச.கலையரசன் அவர்களால் தரப்பட்ட "உலகாளுவோம் உயிர்த் தமிழால்..." என்ற தலைப்பைப் பணிவோடு ஏற்று உலகத் தாய்மொழி நாளில் என் பாவண்ணம் கேட்போம் வாரீர்!


ஐநா மன்றம் யுனெஸ்கோ பிரிவடா
2000ஆம் ஆண்டு மாசி 21ஆம் நாளடா
உலகத் தாய்மொழி நாளென உரைத்ததடா
உரைத்த நாள் தொட்டு இன்று வரையடா
தாய்மொழி நாளன்று தமிழ்மொழி நினைவடா
உணர்வுகளை வெளிப்படுத்தத் தாய் மொழியடா
தமிழினத்தின் அடையாளம் தமிழ் மொழியடா!

வீசும் காற்றும் "கா", "கூ" என இசைக்குமடா
ஓடும் ஆறும் "சல", "சல" என இசைக்குமடா
உடுக்கை அடி "தமிழ்", "தமிழ்" என இசைக்குமடா
இயற்கை எழுப்பும் இசையுணர்வும் தமிழடா
பிறந்த குழந்தைகளும் "அ..." என அழுவாரடா
இறக்கு முன் பழங்களும் "அ..." என அழுவாரடா
அப்பா அடித்தாலும் "அம்மா" என அழுவாரடா
முள்ளுக் குத்தினாலும் "ஆ...", "ஊ..." என அழுவாரடா
நம்மாள் எழுப்பும் உள்ளுணர்வும் தமிழடா
எட்டுத் திக்கிலும் முட்டிக் கொள்வதும் தமிழடா
எண்ணிப் பாரடா உலகாளுவதும் உயிர்த் தமிழடா!

தமிழெனும் அறிவுக்கடலை நீந்திக்கடக்க இயலுமாடா
உலக மொழிகளைக் கொஞ்சம் அலசிப் பாரடா
அம்மொழிகளுக்கு உள்ளே உலாவும் தமிழைப் பாரடா
அறிவியல் ஆய்வுக் கண்டுபிடிப்பு எல்லாமடா
தமிழிலக்கியத்தில் ஊறிக் கிடப்பதைக் காண்பாயடா
உருளும் உலகில் திரளும் அறிவு எல்லாமடா
ஒன்றே முக்கால் அடிகளில் வள்ளுவரும் உரைத்தாரடா
முதலில் அகத்தியரும் தமிழுக்கு இலக்கணம் வகுத்தாரடா
விரும்பி வந்திங்கே நற்றமிழைக் கற்றுக்கொள்ளடா
பிறமொழிச் சொல்களைக் கொஞ்சம் தூக்கி எறியடா
நற்றமிழ்ச் சொல்களைப் பஞ்சமின்றிக் கையாளடா
உலகெங்கும் விஞ்சி நிற்பதும் தமிழ் மொழியடா
எண்ணிப் பாரடா உலகாளுவதும் உயிர்த் தமிழடா!

10 கருத்துகள் :

  1. விழா சிறக்க வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  3. வாழ்த்துகள்,நன்றி, எனது kavithaigal0510.blogspot.com-கொஞ்சம் பார்த்து கருத்தினை வழங்குங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  4. விழா சிறக்க வாழ்த்துக்கள்
    கலந்து கொள்ள முடியவில்லை
    என நினைக்கும்போது சிறு வருத்தம்
    ஆள்கிறது என்னை....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!