Translate Tamil to any languages.

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

ஆண்டவனுக்கு (கடவுளுக்கு) என்ன வேலை?

நண்பர் கில்லர்ஜி
"நான் தான் கடவுள்" என்ற பதிவை போட
http://killergee.blogspot.com/2016/02/blog-post_26.html
நானும் அதைப் படித்தேன்! - அப்பதிவிற்கான
பின்னூட்டங்களில் - அவரே
ஆண்டவனை (கடவுளை) விரட்டிவிட்டார் என
மின்னியதைக் கண்டதும் - என்னால
சும்மா இருக்க முடியல... - அதனால
ஆண்டவனுக்கு (கடவுளுக்கு) என்ன வேலை? என
எழுதி முடித்தேன் - அதனை
கொஞ்சம் படித்துப் பாருங்க!
அதற்கு முன்
அவரது பதிவைப் படித்துப் பாருங்க
நானும்
"விஞ்ஞானிகளால் முடியாது ஐயா!
Wait N See; Waste ஐயா!
ஆனால், இப்பவும்
மெஞ்ஞானிகளால் முடியும் ஐயா!
எப்படி என்கிறீரா? - எனது பதிவை
படித்தால் புரியும் ஐயா!" என
பின்னூட்டம் இட்டுள்ளேனே!

ஆண்டவன் ஒருவர்
ஆண்டவனை அடைய அறநெறி (மதம்) ஒன்று
அது தான் உண்மை!
நம்மாளுங்க
ஆளுக்கொரு அறநெறியைப் (மதத்தைப்) பின்பற்றுவதால்
எனக்கு இப்படித்தான் பா/கவிதை வருகிறதே!
நம்மாளுங்க நிலையைப் பார்த்த
ஆண்டவன் கண்ணீர் வடிக்க - அது
மழையாக வந்து மலையுச்சியில் வீழ்ந்து
நாலா பக்கமும் வழிந்தோட
வீழ்ந்த மழை நீர் அருவியாகப் பெருகி
கடலோடு கைகுலுக்கிக் கலந்துவிடுகிறதே!

கலந்த மழை நீர்
கடல் நீர் நிலையை உயர்த்த
உயர்ந்த கடல் நீர் நிலையால்
தரைவாழ் நம்மாளுங்க சாகாமல் இருக்க
கடல் நீரை உறிஞ்சவே
ஆண்டவனும் பகலவன் (சூரியன்) ஆனாரே!

ஆண்டவன் வடித்த கண்ணீரால் ஆகிய
அருவிகள் எல்லாமே
வெவ்வேறு வழிகளில் பயணித்தாலும்
கடைசியில் கடலோடு கலந்துவிடுவது போல
ஆண்டவனை அடைய வழிகாட்டும்
அறநெறிகள் (மதங்கள்) வெவ்வேறாயினும்
ஆண்டவனை அடைய வழிகாட்டினால் போதுமே!

வெவ்வேறு வழிகளில் பயணிக்கும் அருவிகள்
கடலில் கலப்பதைப் பார்க்க வைக்க
மழையையும் வெயிலையும் வழங்கி
அறநெறிகள் (மதங்கள்) வெவ்வேறாயினும்
ஆண்டவனை அடைய வழிகாட்டுகிறதா
நம்மாளுங்க
ஆண்டவனை (தன்னை) அடைய முயலுறாங்களா
தமக்குள்ளே மோதிக்கொண்டு சாகிறாங்களா
என்றெல்லாம் கண்காணிப்பதே
ஆண்டவனுக்கு வேலையாகிப் போச்சே!

21 கருத்துகள் :

  1. பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  2. ஆண்டவன் தன் வேலையை ஒழுங்கா செய்யவில்லை என்பதுான் பிரச்சினை அய்யா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  3. ஆண்டவன் விமர்சனத்துக்குள்
    இருந்தும்
    அழகான கவிதை வரிகள்
    தோழர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  4. அருமை நண்பரே ஆண்டவரைக் குறித்த தங்களது ''பா'' பல நல்ல விடயங்களை கொடுத்தது நன்றி - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  5. வணக்கம்
    அழகிய வரிகள் இரசித்தேன்...வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  6. சிறப்பான கவிதை!
    சீரிய சிந்தனையோட்டம்...வாழ்த்துக்கள் அய்யா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  7. ரசித்தேன். நல்ல சிந்தனை, நல்ல கவிதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  8. அரசியல் வாதிகளை மட்டும் கண்காணிக்க மாட்டார் போலிருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  9. நன்றாகவே சொல்லி இருக்கின்றீர்கள் நண்பரே! ஆண்டவனின் வேலை அதுவல்லவே. மக்கள்தான் தமக்குள் அடித்துக் கொள்கின்றனர் சரியாகப் புரிந்து கொள்ளாமல்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  10. பகிர்வுக்கு நன்றிகள் ஆண்டவன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!