Translate Tamil to any languages.

வெள்ளி, 8 ஜனவரி, 2016

மூளை வேலை செய்யவில்லையே!

சிலரது பதிவுகளைப் படித்ததும் சில எண்ணங்கள் தோன்றலாம். அதில், 'இப்படி நான் எழுதியிருந்தால், எப்படி இருக்கும்?' என்று எண்ணத் தோன்றியிருக்கலாம். அதெப்படி என்றால் தொடர்ந்து படியுங்க...

அறிஞர் பகவான்ஜி அவர்கள் இப்படி எழுதினார்!

"நியாயம் கேட்கும் நீதிபதியின் பேனா :)

முனை நசுக்கி குப்பையில் வீசப்பட்ட பேனா கேட்டது...
குற்றவாளிக்கு மரணத் தண்டனை எழுதியது சரி...
எனக்கேன் மரணத் தண்டனை ?

(சான்று: http://www.jokkaali.in/2016/01/blog-post_8.html)"

அறிஞர் பகவான்ஜி அவர்களின் பதிவைப் பார்த்ததும் இப்படி எழுதத் தோன்றிச்சு...

எழுதுகோலுக்கு வாயிருந்தால்
ஏனடா யாழ்பாவாணா
இப்படியும் எழுதலாமோ என்று
கேட்டிருக்கலாம் - அது
அந்த நீதியாளரைப் பார்த்தெல்லோ
ஐயம் ஒன்றுண்டு - அதை
தெளிவுபடுத்து என்கிறதே!

ஏய்! நீதியாளரே!
ஆளுக்கோ சாவு ஒறுப்பு
அதையேன்
எழுதுகோலுக்கும் வழங்குகிறாய்!
கேட்பது நானல்ல
உன் கையாலே
முனையுடைத்து வீசப்பட்ட
எழுதுகோல்!

எழுதுகோலுக்குக் கண்ணிருந்தால் - அது
நீதியாளரின் உடல்மொழியைப் படித்திருக்கும்
எழுதுகோலுக்குக் காதிருந்தால் - அது
நீதியாளரின் பேச்சு மொழியைப் படித்திருக்கும்
உடலுள்ள எழுதுகோலின்
உள்ளத்தில் எழும் ஐயம் என
நீதியாளரிடம் தொடுத்த கேள்விக்கணைக்கு
நானும் பதிலைத் தேடுகிறேன் - அதற்கு
என் மூளை வேலை செய்யவில்லையே!

அறிஞர் பகவான்ஜி அவர்களின்
பதிவின் கருப்பொருளைக் கையாடி
எழுதுகோலுக்கு
காண், காது, உடல், உள்ளம் வைத்து
எழுதுகோலின்
உள்ளத்தில் எழும் ஐயத்தை
பா/ கவிதை நடையில் தந்தேன் - அது
விடை கண்டறியப்படாத நம்மாளுங்க
ஐயம் என்பேன்!

பாப்புனைய விரும்பும் உள்ளங்களே!
பிறர் பதிவைப் படித்ததும்
'இப்படி நான் எழுதியிருந்தால்,
எப்படி இருக்கும்?' என்று
எண்ணத் தோன்றியதை எழுதினாலும்
மூளை வேலை செய்யாத
யாழ்பாவாணனின் கிறுக்கலை விட
சிறந்த பா/ கவிதை புனைவீரே!


குறிப்பு: உறவுகளே! 1987 இல் பாவலர் மூ. மேத்தா அவர்களின் 'கண்ணீர் பூக்கள்' போன்ற பாநூல்களைப் படித்துத் தான் பாப்புனையப் பழகினேன் என்பதைப் பாப்புனைய விரும்புவோருக்குக்காக நினைவூட்டுகிறேன். பிறர் கருப்பொருளைக் கையாள்வதில் தவறில்லை. ஆனால், பிறர் அடையாளம் சுட்டாமல் அவரது பதிவைக் கையாண்டால் இலக்கியக் களவு தான். இப்படிப் பிறரது பதிவைப் படித்ததும் அப்பதிவின் கருப்பொருளுக்குக் காண், காது, மூக்கு, நாக்கு, வாய், உடல், உள்ளம் எல்லாமே வைத்து எழுதிப்பாருங்க... உங்கள் உள்ளத்தில் பா/ கவிதை ஊற்றெடுக்குமே!


'ஊற்று' வலைப்பூப் பதிவுத் திரட்டியில் இணையலாம் வாங்க!
http://www.ypvnpubs.com/2016/01/blog-post.html

15 கருத்துகள் :

  1. நகைச் சுவையை எழுத பேரறிவு வேண்டும். அதைத்தான் பகவான்ஜி செய்து கொண்டிருக்கிறார். அவர் பதிவின் மூலம் நம்மை சிரிக்க வைக்கிறார். அதை ஒட்டி உருவான தங்கள் கவிதை அருமை. ரசித்தேன். நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      நீக்கு
  2. நகைச்சுவையால் பிறந்த தங்களது கவிதை நன்று நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      நீக்கு
  3. நகைச்சுவைக்குப் பிறந்த கவிதை அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      நீக்கு
  4. சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என் பாணி ,எதையுமே கவிதையாய் வடிப்பது உங்கள் பாணி !
    ரசனையுடன் என் பதிவுக்கு மறு உருவம் கொடுத்தமைக்கு நன்றி :)

    செந்தில் ஜி ,இது கொஞ்சம் உங்களுக்கே ஓவரா தெரியலே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      நீக்கு
  5. ஒரு கருவை வைத்து அழகான கவிதை. தாங்கள் கூறியுள்ள உத்தி பயனுள்ளதாகும். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      நீக்கு
  6. கவிதையும் இலக்கியத்துறையில் திருட்டையும் சாடும்பகிர்வையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      நீக்கு
  7. நன்றாக இருக்கிறது...அருமை1

    பதிலளிநீக்கு
  8. அட!நகைச்சுவையிலிருந்து பிறந்தக் கவிதை அருமை! நல்ல யோசனைதான் ஆனால் எங்களுக்குக் கட்டுரைகள் தான் பிறக்கின்றது. பா பிறப்பதில்லையே!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!