
பா (கவிதை) புனைய விரும்பும்
- எவரும்
பார்த்தும் படித்தும் புரிந்திட
வைக்கும்
ஊமைக்கனவுகள் வலைப்பூ அறிஞர்
விஜூ அவர்களின்
பதிவுகளைப் படித்த வேளை உணர்ந்தேன்
- நானும்
என் தளத்தில் அவரது பதிவுகளைப்
பகிர்ந்தால்
என் வாசகரும் அவரது பதிவுகளைப்
படிக்க
நானும் சிறு முயற்சி செய்ததாக
இருக்குமே!
பா (கவிதை) புனைய விரும்பும்
- எவரும்
பாப்புனைய முன் 'எது கவிதை' என்றறிந்திட
"கவிதை என்பது
நம் உணர்வுகளிடையே
ஏதேனுமொரு தூண்டுதலை
நிச்சயம் நிகழ்த்துவதாகவேதான்
எப்போதும் இருக்கிறது."
என்று கூறும்
அறிஞரின் எண்ணத்தைப் படிக்க வாரும்!
"படைப்பவனின் மொழியாளுமை
நமக்குள் ஏற்படுத்தும் தாக்கமே
- இங்கு
முதன்மைப்படுத்தப்பட வேண்டியது.
- அதுவே
மொழி தன்னைக் கடைந்து பிரமிப்பூட்டும்
சிற்பங்களாய்க் காட்சியளிக்கின்ற
சொல்லின் சுவை. - அத்தகு
சொல்லாடலிலிருந்து கவித்துவத்தை
வாசகன் உணர்தல்
ஒரு விவரிக்க இயலா அனுபவம்."
என்று தொடரும்
அந்தப் பதிவைப் படிக்க - நீங்கள்
இந்த இணைப்பினைச் சொடுக்கினால்
போதுமே!
கட்டுரை வரிகளை உடைத்து ஆக்குவதோ
கதை உணர்வுகளை ஒழுங்கு படுத்துவதோ
உரை நடையாக எழுதியதைச் சிதைத்தோ
சொல்களைக் குழுவாக ஆக்கியோ -
சொல்களை
அங்கும் இங்குமாய் அழகாக அடுக்கியோ
புனைவது எல்லாம் பா (கவிதை) ஆகாதே!
"கல கலவென கதைத்துக் கொண்டிருந்த
கவிதா, காத்தானின்
நினைவுவரத் துளித் துளியாகக்
கண்ணீர் வடிக்கிறாள்." என
உணர்வினை அப்படியே எழுதினால்
வரிப் பா (வசன கவிதை) என்கிறோம்!
"ஆளும் ஆளும் நேருக்குநேர்
நோக்கவே
கண்ணும் கண்ணும் வெட்டாமல் பார்க்கவே
"பாய்ந்தது அன்பு!"
" என ஈரடிச் செயலும் ஈற்றடிச் செய்தியாய்
புனைவது துளிப்பா (ஹைக்கூக் கவிதை)
என்கிறோம்!
"யாழ்பாவாணன் பாப்புனையக்
கற்றுத்தர வந்தாராம்
வாழ்க்கையில் தொல்லையாம் அடிக்கடி
தொடராராம்
பாப்புனைய விரும்பும் உள்ளங்களோ
தளராராம்
பாப்புனைய உதவும் பதிவுகளைப்
பகிருவாராம்"
என
முதலிரு அடிகளில் யாழ்பாவாணனின்
இழுபறியும்
ஈற்றிரு அடிகளில் பிறர் பதிவுகளின்
பகிர்வுமாக
என யாழ்பாவாணனை நையாண்டி (கேலி)
செய்து
புனைவது மகிழ்வூட்பா (க்ளெரிஹ்யு)
என்கிறோம்!
"பள்ளிக்குப் போற பொண்ணு
- மாலையில்
பள்ளி ஆசிரியர் வீட்டில படிக்க
போனாளாம்.
தேர்வு எழுதிய பள்ளிப் பொண்ணு
- தேர்வில்
எல்லாப் பாடத்திலும் குறைந்த
மதிப்பெண்ணாம்.
"உருளும் நினைவில் காதலாம்..."
" என நான்கடிச் செயலும்
ஈற்றடிச் செய்தியாய்
புனைவது குறும்பா (லிமரிக்) என்கிறோம்!
"கழுத்தில தங்கச் சங்கிலி
திறந்த மேற்சட்டை
எடுப்பான நடை
எல்லாம்
தெருவால போன பெண்ணை ஈர்த்திட
- அவளும்
காளை மேலே கண்ணைப் போட்டாள்!
காளையின் கழுத்தில மின்னியது
போலித் தங்கச் சங்கிலி என்றறிய
- வாலையும்
காளையைக் கைகழுவி விட்டாளாம்!"
என
உணர்வு வீச்சாகத் தொடுத்துப்
புனைவதும்
புதுப்பா (புதுக் கவிதை) என்கிறோம்!
பா (கவிதை) புனைய விரும்பும்
- எவரும்
பாப்புனைய முன் 'எது கவிதை' என்றறிந்தாலும்
பாவிற்கு (கவிதைக்கு) இலக்கணம்
இருப்பதை
மறக்க இயலாதே - எப்படி இருப்பினும்
இலக்கியம் தோன்றிய பின்னர் தான்
இலக்கணம் தோன்றியது என்றெண்ணி
இலக்கணம் அறியாமல் புனைவது எல்லாம்
பா (கவிதை) என்றமையாது என்பேன்!
ஊமைக்கனவுகள் வலைப்பூ அறிஞர்
விஜூ அவர்களின்
"யாப்புச் சூக்குமம்"
என்ற இலக்கண நுட்பத்தை
பா (கவிதை) புனைய விரும்பும்
- எவரும்
கடுகளவேனும் கற்றுக்கொண்டால்
வரிப் பா (வசன கவிதை), துளிப்பா
(ஹைக்கூக் கவிதை),
மகிழ்வூட்பா (க்ளெரிஹ்யு), குறும்பா
(லிமரிக்),
புதுப்பா (புதுக் கவிதை) என்றெதற்கும்
இலக்கண இறுக்கத்துடன் பா (கவிதை)
புனைய விரும்புவீரே!
இணைப்புகள்:
யாப்புச்சூக்குமம் -I
யாப்புச்சூக்குமம் -II
யாப்புச் சூக்குமம் -III
யாப்புச் சூக்குமம் -IV
'ஊற்று' திரட்டியில் இணைத்து - உங்கள்
பதிவுகளைப் பரப்பலாம் வாருங்கள்!
http://ootru.yarlsoft.com/
சிறப்பாக சொல்லியுள்ளீர்கள்! விஜு அவர்களின் தளத்தை தொடர்ந்து வாசிக்கும் வாசகர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமை அடைகிறேன்! நன்றி!
பதிலளிநீக்குஇனிய தைப்பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு
நீக்குதங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்கின்றேன்.
மிக்க நன்றி!
தங்களின் தகவல் திரட்டிக்கு நன்றி நண்பரே
பதிலளிநீக்குஇனிய தைப்பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு
நீக்குதங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்கின்றேன்.
மிக்க நன்றி!
வணக்கம்
பதிலளிநீக்குஐயாவின் படைப்புக்களை தேடிப்படிப்பதில் நானும் ஒருநபர் அந்தவகையில் தங்களின் முற்சிக்கு எனது வாழ்த்துக்கள்
தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இனிய தைப்பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு
நீக்குதங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்கின்றேன்.
மிக்க நன்றி!
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஇனிய தைப்பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு
நீக்குதங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்கின்றேன்.
மிக்க நன்றி!
தமிழர் திருநாள் வாழ்த்துக்களை
பதிலளிநீக்குமகிழ்வோடு நவில்கின்றேன்
கனிவோடு ஏற்றருள்வீர்
இனிய தைப்பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு
நீக்குதங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்கின்றேன்.
மிக்க நன்றி!
அருமையான தொகுப்பு ஐயா...
பதிலளிநீக்குஇனிய தமிழர் தின நல்வாழ்த்துகள்...
இனிய தைப்பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு
நீக்குதங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்கின்றேன்.
மிக்க நன்றி!
அருமை ஐயா...! பொங்கல் வாழ்த்துக்கள் !
பதிலளிநீக்குஇனிய தைப்பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு
நீக்குதங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்கின்றேன்.
மிக்க நன்றி!
தகவல்களுக்கு நன்றி நண்பரே! இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஇனிய தைப்பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு
நீக்குதங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்கின்றேன்.
மிக்க நன்றி!
நல்ல விளக்கங்கள். விஜூவைப் படித்து பிரமிப்பவர்களில் நானும் ஒருவன். இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு2016 தைப்பொங்கல் நாளில்
நீக்குகோடி நன்மைகள் தேடி வர
என்றும் நல்லதையே செய்யும்
தங்களுக்கும்
தங்கள் குடும்பத்தினருக்கும்
உங்கள் யாழ்பாவாணனின்
இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!
எம் தமிழினமே உவகையுடன் கொண்டாடிடும் நன்னாளாம் இன்னாளில் அனைவருக்கும் தைத் திங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதங்களின் சீரிய பணி தொடர வாழ்த்துக்கள் நண்பரே!
2016 தைப்பொங்கல் நாளில்
நீக்குகோடி நன்மைகள் தேடி வர
என்றும் நல்லதையே செய்யும்
தங்களுக்கும்
தங்கள் குடும்பத்தினருக்கும்
உங்கள் யாழ்பாவாணனின்
இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!
தங்களின் முயற்சி எங்களுக்கு உதவும் என்று நம்புகிறோம். நன்றி.
பதிலளிநீக்கு2016 தைப்பொங்கல் நாளில்
நீக்குகோடி நன்மைகள் தேடி வர
என்றும் நல்லதையே செய்யும்
தங்களுக்கும்
தங்கள் குடும்பத்தினருக்கும்
உங்கள் யாழ்பாவாணனின்
இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஇனிய தைப்பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு
நீக்குதங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்கின்றேன்.
மிக்க நன்றி!
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்! ஊமைக்கனவுகள் சகோதரரின் பதிவைத் தொடர்ச்சியாக வாசிக்கும் வாசகி நான். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பதிவுகளைப் படித்து வெண்பா இலக்கணம் கற்றுக்கொண்டேன். மிக எளிதாகப் புரியும் படி இருக்கின்றது.தமிழ் வளர்க்கும் நல்ல தளமொன்றை அறிமுகப்படுத்தும் தங்கள் செயல் பாராட்டப்பட வேண்டியது. நன்றி.
பதிலளிநீக்குஇனிய தைப்பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு
நீக்குதங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்கின்றேன்.
மிக்க நன்றி!
முதலில் இனிய பொங்கல் வாழ்த்துகள் சகோ.
பதிலளிநீக்குதங்கள் பதிவு திரட்டியில் இணைய நீங்கள் தெரிய படுத்தியவுடன் முயற்சித்தேன். என்னால் இயலவில்லை. மற்றும் 5 மாதங்களாக இணையம் இல்லா காரணத்தால் யாரையும் தொடரயியலவில்லை. விவரங்கள் தெரிவித்தால் ஏதுவாக இருக்கும். இப்போது இங்கு இணைந்துவிட்டேன். சகோ.
இனிய தைப்பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு
நீக்குதங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்கின்றேன்.
மிக்க நன்றி!
வலைப்பூவின் பெயர், வலைப்பூவின் RSS Feed Url, வலைப்பூ தொடங்கிய ஆண்டு, ஆகியவற்றை ootru2@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் போதும். நாம் தானியங்கி முறையில் புதிய பதிவுகளைத் திரட்டி வெளியிடுவோம்.
நீக்கு