Translate Tamil to any languages.

வெள்ளி, 18 டிசம்பர், 2015

அன்று 'கவிமுரசு' இன்று 'கலைத்தீபம்' எனக்குக் கிடைத்ததே!

அன்று 'கவிமுரசு'

தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்க வெளியீடாக 402 கவிஞர்களின் "கவி விசை" என்னும் உலக சாதனைத் கவிதைத் தொகுப்பு ஒன்று 09/02/2013 அன்று வெளியாகியது. அதில் எனது கவிதையும் இடம் பிடித்தது. அதற்காக 16/06/2013 அன்று அம்பத்தூர், ஜி.கே மாளிகை, சென்னையில் தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் "திருக்குறளே தேசிய நூல்" என்ற கவிதைத் தொகுப்பினை வெளியிட்ட வேளை 'கவி விசை' ஆசிரியர்களுக்கு "கவிமுரசு" பட்டயம் வழங்கி மதிப்பளித்துள்ளனர்.


அந்நாள் காசி.ஜீவலிங்கம்/யாழ்பாவாணன் ஆகிய எனக்கு அந்த "கவிமுரசு" பட்டயம் கிடைத்ததை நினைவூட்ட விரும்புகிறேன்.
ஏனெனில், என் வாழ்நாளில் எனக்குக் கிடைத்த முதல் மதிப்பளிப்பு "கவிமுரசு" என்பேன். அதனை வழங்கிய தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கத்தினருக்கு நன்றி.

இன்று 'கலைத்தீபம்'

உலகெங்கும் தமிழ் இலக்கிய உறவுகளைப் பலப்படுத்தும் நோக்கில் சுற்றுலாச் சென்று வரும் மலேசியப் படைப்பாளிகள் இலங்கை வந்திருந்த வேளை; 'தடாகம் கலை இலக்கிய வட்டம்' முயற்சியில் 15/12/2015 அன்று இலங்கை, திருகோணமலை நகர், கிறீன் வீதி, சண் சைன் நிறுவன (கொட்டல்) அரங்கில் (மண்டபத்தில்) இலக்கியச் சந்திப்பு ஒன்று நிகழ்ந்தது.

15/12/2015 அன்று 'தடாகம் கலை இலக்கிய வட்டம்' நடாத்திய இலக்கியச் சந்திப்பு நிகழ்வில் தடாகம் கலை இலக்கிய வட்டம் - கல்வி கலை கலாச்சார பண்பாட்டு அமைப்பும் கனடா படைப்பாளி உலகம் அமைப்பும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் இணைந்து எனது இலக்கிய முயற்சிகளைப் பாராட்டி 'கலைத்தீபம்' என்ற விருதினை 15/12/2015 அன்று வழங்கி மதிப்பளித்து இருந்தனர். இதற்கு 'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றத் தலைவர் ரூபன் அவர்களின் பங்களிப்பும் இருந்தது என்பதை நினைவூட்ட விரும்புகின்றேன்.



எனக்குக் 'கலைத்தீபம்' என்ற விருதினை வழங்கிய தடாகம் கலை இலக்கிய வட்டம் - கல்வி கலை கலாச்சார பண்பாட்டு அமைப்பு, கனடா படைப்பாளி உலகம் அமைப்பு, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆகியோருக்கு நன்றி.

இந்நிலையில் எனது வலைப்பணிகளாக...
உளநல மதியுரையும் வழிகாட்டலும்
ஊடகத்துறை அறிவூட்டலும் படைப்பாளிகளை ஊக்குவித்தலும்
தொழில்நுட்பப் பகிர்வும் தமிழ் மென்பொருள் வெளியீடும்
உலகெங்கும் தூய தமிழ் பேண வழிகாட்டுதலும்
மேலும், நூறாயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் மின்நூல்களை இணையவழியில் திரட்டிப் பகிர்தல்
ஆகிய செயற்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுப்பேன்.


சின்னப்பொடியனாகிய என்னையும் ஒரு பொருட்டாகக் கருதி மதிப்பளித்தோருக்கும் உதவிகள், ஒத்துழைப்புகள் வழங்கியோருக்கும் நன்றி கூறுவதோடு எனது வலைப்பணிகளைத் தொடரத் தங்கள் ஆதரவையும் நாடி நிற்கின்றேன்.

24 கருத்துகள் :

  1. பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  2. மகிழ்வான விடயம் நண்பரே மென்மேலும் விருதுகள் பெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  3. என் நண்பர் நீங்கள் அமைதியாக இருந்து விட்டீர்களே அறிமுகப் படுத்தி இருக்கலாம்
    இதை பார்த்த போது தான் நீங்கள் யாரென்று புரிந்து கொண்டேன் மனதிற்கு கவலை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவலை வேண்டாம்.
      இன்னொரு சூழ்நிலை (சந்தர்ப்பம்) வரும் வேளை கருத்துப் பகிர வாய்ப்புத் தரலாம்.
      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  4. மகிழ்ச்சி. பாராட்டுகள்! தொண்டு தொடர வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  5. மேன்மேலும் விருதுகள் பெற்று புகழ் பெற வாழ்த்துகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  7. சாதனைகளும், வெற்றிகளும் தொடரட்டும். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  8. மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் ஐயா
    சாதனைகளும் விருதுகளும் தொடரட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  9. மிக மிக மகிழ்வான விசயம் நண்பரே! தாங்கள் மேன் மேலும் வெற்றிகள் பெற வாழ்த்துகள். விருதுகளுக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  10. அன்புள்ள அய்யா,

    "கவிமுரசு" பட்டயம் பெற்றுள்ள தாங்களுக்குத் தற்பொழுது தடாகம் கலை இலக்கிய வட்டம் - கல்வி கலை கலாச்சார பண்பாட்டு அமைப்பு 'கலைத்தீபம்' என்ற விருதினை வழங்கிப் பெருமைப் படுத்தியதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். பாராட்டுகளும்... வாழ்த்துகளும்...!

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  11. உங்களின் உழைப்புக்கு இன்னும் நிறைய விருதுகள் கிடைக்கும் !வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!