அன்பான, அறிவான, அழகான, பண்பான,
பலமான குமரி ஒருத்திக்கு நானும் தாலி கட்டினேன். நான் தாலி கட்டின
பிறகு, அவள் தானே என்னில்லத்தை ஆளும் இல்லாள். என்னைப் பெத்த
அம்மையும் அப்பனும் "பிள்ளை உழைச்சுப் போட்டால் சமைச்சுப் போடு" என
மருமகளுக்கு மதியரையும் வழங்கியிருந்தனர். எனக்கோ வேலை இல்லாமல் போச்சு; அந்த நேரம் பார்த்து உழைச்சுப் போட்டால் சமைச்சுப் போடுகிறேனென இல்லாளும்
எனக்கு ஒத்துழையாமல் இருந்தாள்.
நல்லாய் உழைத்து வருவாய் பெருக்கினால்
இல்லாள் பிழைக்கத் துணையிருப்பாள் -
இல்லையேல்
நல்லாய் உழைக்கத்தான் போ!
அந்த நேரம் பார்த்து வந்த மேலுள்ள 'ஒரு விகற்ப நேரிசை சிந்தியல்
வெண்பா' கூட நாலு காசு ஈட்ட உதவவில்லை. அடுத்ததென்ன? வேலை தேடி நாலு காசு ஈட்டின பிறகு தானே இல்வாழ்வும் இனித்தது.
வேலையற்று இருக்கும் ஆண்களே!
புண்பட்ட என் கதை அறிந்தாவது
"உழைப்பாளியே ஆண்களின் அழகானவர்"
என்று
பெண்கள் ஒத்துழைப்போடு வாழக்
கற்றுக்கொள்ளுங்கள்.
என் வாழ்வும் உனக்கு வழிகாட்டுமென
நானுரைத்தேன் நீ மகிழ்வாய் வாழவே!
வேலையற்ற இளையோரும் தாலி கட்டிய இல்லத்து
அரசர்களும் "ஒழுங்காய் உழைத்துப் போடும் ஆண்கள்" என நாலு காசு உழைக்க
முயலுங்கள். அப்ப தான் உங்கள் காதலியோ இல்லாளோ உங்களுக்கு ஒத்துழைப்பாள். உங்களைப் பார்த்தாவது நாளைய இளையோர்
வேலையின்றித் தெருச் சுற்றாமல் உழைத்துப் பிழைத்து வாழட்டும்.
ஒவ்வொரு வெள்ளி மாலை ஏழு மணிக்கும் (இல. இந்.
நேரம்) எமது இணைய (Team
Link) வழி மரபுக் கவிதைப் பயிலரங்க (https://m.teamlink.co/9159510023...) நிகழ்வு இடம்
பெறும். விரும்பும் உள்ளங்கள் இணையலாம். விரும்பியோர் தங்கள் நண்பர்கள்
எல்லோரையும் இணைத்து உதவலாம். பயன்மிக்க பயிலரங்கம் என்பதை ஒருமுறை பங்குபற்றினால்
தெரியவரும். இப்பயிலரங்கத் தொடரினைத் தொடர்ந்து வருகை தந்து பங்குபற்றியோருக்கு
மின்சான்றிதழ் வழங்கப்படும்.
இலக்கியத்தில்
கட்டுரை, கதை, கவிதை, பாட்டு, நகைச்சுவை, நாடகம் எனப் பல
இருப்பதைத் தாங்கள் அறிவீர்கள். இவற்றில் கவிதை எழுதுவதையே முதலில் எந்தப்
படைப்பாளியும் முயற்சித்திருப்பாரென நான் நம்புகின்றேன். கடுகு போலச் சிறிய
கவிதைக்குள் உலகம் போன்ற பெரிய செய்தியைச் சொல்ல முடிவதால் எல்லோரும் முதலில்
கவிதையை நாடியிருக்கலாம்.
கவிதைக்கு
உயிர் ஓசை / சந்தம் / இசை என்பார்கள். அப்படி அமையப் பெற்ற படைப்புகளே கவிதையாம்.
பொதுவாக வசனகவிதை, புதுக்கவிதை, மரபுக்கவிதை என்பன
பேசப்படுகிறது. அதிகமானோர் புதுக்கவிதைச் சொந்தங்கள் தான். சிலருக்குத் தான்
மரபுக்கவிதை நாட்டமாம்.
எதுகை, மோனை எட்டிப்
பார்க்க
சந்தம்
எனும் ஓசை நயம்
பாக்களில்
ஒட்டிக் கொள்ளவே
மரபுக்
கவிதைகள்
எளிதில்
உள்ளத்தில் இருக்குமாமே!
இவ்வாறான
மரபுக்கவிதைகளை எழுதிப் பழக ஊக்குவிக்கும் முகமாக இணையத்தில் மரபுக் கவிதைப்
பயிலரங்குகளை யாழ்பாவாணன் போன்றோர் நடாத்தி வருகின்றனர். தமிழ் அறிஞர்கள்
இப்பயிலரங்குகளில் சிறப்பாகப் பயிற்றுவிக்கின்றனர். இதற்கிடையே "இணையத்தில்
மரபுக் கவிதைப் பயிலரங்குகளா? பயன் தருமா?" என்ற கேள்விகள்
எழுகின்றன.
"இணையத்திலா? அக்கல்வி சரிவராது
என்பார்! உள்ளத்தில் கவித்துவம் இருந்தால் கவிதை வருமே? பிறகேன் இணையத்தில்
மரபுக் கவிதைப் பயிலரங்குகள்? இணையக் கல்வி காற்றோடு கரையலாம்; உள்ளத்தில் நிலைக்காது!" என்று எவரும் சொல்லலாம்.
எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, பா வகை என்பன
மரபுக் கவிதைகளைப் புனையத் தெரிந்திருக்க வேண்டும். நல்ல நூல்களைப் படித்துத்
தெரிந்துகொள்ளலாம். இருப்பினும் ஆசிரியரின் வழிகாட்டலோடு பயில்வது சிறப்பாகும்.
அதேவேளை இணைய வழிப் பயிலரங்குகளிலும் பயின்று மரபுப் பாக்களைப் புனைய முடியுமே!
நீங்கள் விரும்பினால் உங்களால் முடியுமே!
விரும்பும்
கவிதைகளை நீபுனையத் தானே
விரும்பிநீ
தான்புனை நன்று
(ஒரு விகற்பக் குறள்
வெண்பா)
விருப்பம்
உள்ள உள்ளங்கள் யாழ்பாவாணன் நடாத்தும் இணைய வழி மரபுக் கவிதைப் பயிலரங்குகளில்
இணையலாம். முழுமையாகப் பயின்றோருக்கு மின்சான்றிதழ் வழங்கப்படும்.
மேற்படி பயிலரங்கில்
முழுமையாகப் பங்கெடுக்கும் பயிலுநர்களுக்கு மின்சான்றிதழ் வழங்கப்படும்.
விரும்பும் எல்லோரும் பங்கெடுக்க முடியும்.
கொரோனா (Covid-19) உலகெங்கும் உலாவி
உயிர்களைப் பறிப்பதும் உறவுகளைத் தனிமைப்படுத்துவதுமாக நகர்ந்தாலும் நம்மாளுங்க
அதிலிருந்து தப்பிக்கப் போராடிய வண்ணம் வாழ்கின்றனர். அந்த வகையில் தமது அறிவினைப்
பெருக்கப் பலரும் இணையவழிப் பயிலரங்கினைப் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில்
தான் யாழ்பாவாணன் கலைப்பணி மன்றமும் இணைய வழியில் இலக்கியப் படைப்பாளிகளை
உருவாக்கப் பயிலரங்குகளை நடாத்தி வருகிறது.
இதுவரை புதுக்கவிதைப்
பயிலரங்கம், நகைச்சுவைப்
பயிலரங்கம், மரபுக் கவிதைப் பயிலரங்கம்-01 நடாத்தியிருந்தோம். தற்போது மரபுக் கவிதைப் பயிலரங்கம்-02 நடைபெறுகிறது. கீழ்வரும் இணைப்பில் அதற்கான காணொளிகளைப் பார்க்கலாம்.
நாம் நடாத்தும்
மரபுக் கவிதைப் பயிலரங்கப் பிந்திய காணொளிகளைக் கீழே பார்க்கவும்.
மரபுக்கவிதைப்
பயிலரங்கம் - தொகுப்பு - 02 - தொடர் - 05
மரபுக்கவிதைப்
பயிலரங்கம் - தொகுப்பு - 02 - தொடர் - 06
மரபுக்கவிதைப் பயிலரங்கம்
- தொகுப்பு - 02 - தொடர் - 07
மரபுக்கவிதைப்
பயிலரங்கம் - தொகுப்பு - 02 - தொடர் - 08
மரபுக்கவிதைப்
பயிலரங்கம் - தொகுப்பு - 02 - தொடர் - 09
யாழ்பாவாணன்
கலைப்பணி மன்றம் இணைய வழியில் இலக்கியப் படைப்பாளிகளை உருவாக்க நடாத்தும்
பயிலரங்குகளில் விரும்பும் உள்ளங்களை இணையுமாறு பணிவோடு அழைக்கின்றோம்.
உலகத் தமிழ் வலைப் பதிவர்களே! எங்கள் அம்மா 28/09/2020 அன்று இறைவனடி சேர்ந்த செய்தி அறிந்து
என்னையும் எங்கள் குடும்பத்தாரையும் ஆற்றுப்படுத்திய எல்லோருக்கும் நன்றி
தெரிவிக்கின்றேன்.
மேலும், 28/10/2020 அன்று எங்கள் அம்மாவின் 31ஆம் நாள் நிறைவு (அந்தியேட்டிக் கிரியைகள்)
கொரோனா (Covid - 19) காரணமாகச்
சுருக்கமாக இடம்பெறுகிறது. இருப்பினும் எங்கள் அம்மா பற்றிய நினைவுப் பதிவுகளை
மின்நூலாகத் தொகுத்துள்ளேன். அதனைத் தங்களுடன் பின்வரும் வழிகளில் பகிருகிறேன்.அதனை ஏற்றுத்
தங்கள் நண்பர்கள் ஊடாக உலகெங்கும் சென்றடைய ஒத்துழைப்புத் தாருங்கள்.
எனது மின்நூலில் காணப்படும் குறை, நிறைகளை
வெளிப்படையாகவே தங்கள் வலைப்பூக்களில் வெளியிடலாம். உங்கள் கருத்துகளும்
மதிப்பீடுகளும் எனது அடுத்த வெளியீட்டைச் சிறப்பாக மேற்கொள்ளப் பின்னூட்டியாக
இருக்குமென நம்புகிறேன்.
எனது மின்நூலைப் பதிவிறக்கக் கீழ்வரும்
இணைப்பைச் சொடுக்க.
எனது மின்நூலை திறன்பேசிச் செயலியாகப்
பதிவிறக்கித் தங்கள் Android, Windows திறன்பேசிகளில் நிறுவிப் பின் பக்கம் பக்கமாகப் (பிளாஷ் வியூவரில்)
படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://mobincube.mobi/E8H7RJ
(இவ்விணைப்பைத்திறன்பேசியில்
மட்டும் பாவிக்குக)
எனது மின்நூலின் PDF தொழில் நுட்பப்
பதிப்பை கீழே விரித்துப் படிக்கலாம்.
எமது இணைய வழி
வெளியீடுகளில் வலைப்பூ (Blog), வலைப்பக்கம் (Website), கருத்துக்களம் (Forum), ஒளிப்படச் சேமிப்பு (Flickr), ஒலிப்பதிவுச்
சேமிப்பு (Soundcloud), ஒளிஒலிப்பதிவுச்
சேமிப்பு (You Tube), பல்லினக் கோப்புச்
சேமிப்பு (Online Drives), மின்நூல் (eBook) ஆகியவற்றைக் கையாளும்
ஆளுமை அதிகமானோரிடம் இருக்கு. திறன்பேசி வழியே Share Chat, Your Quote எனப் பல செயலிகள்
நமது எண்ணங்களைப் பகிர உதவுகிறது. இவை யாவும் பல்லூடக (Multi Media) வெளியீட்டுக்கு
உதவும்.
வானொலி (Radio) போன்று
ஒலிப்பதிவுகளைச் சேமித்துப் பகிர ஒரு செயலி திறன்பேசியில் இருக்கு. அதனை Google Play Store இல் Anchor Podcasting App எனப் பதிவிறக்கலாம்.
அதனை Google Chrome இல் Anchor.Fm எனத் தட்டிப்
பார்க்கலாம். நீங்கள் Anchor செயலி அல்லது Anchor.Fm இணையப் பக்கம் ஊடாக User Name, eMail, Password வழங்கி உறுப்பினராகி
உள்ளே நுழைந்து உங்கள் எண்ணங்களையும் ஒலிப்பதிவு செய்து பகிர முடியும். Anchor.Fm பிற தளங்களிலும்
உங்கள் ஒலிப்பதிவைப் பகிர உதவுகிறது. அவைb pocket casts, radio public, breaker, spotify, google podcasts,
apple podcasts, castbox, overcast, tuneln என்பனவாகும்.
நானும் எனது
திறன்பேசியில் Anchor Podcasting
App ஐப் பதிவிறக்கி எனது எண்ணங்களை ஒலிப்பதிவு செய்து பகிருகிறேன்.
மேலும் castbox, tuneln
ஆகியவற்றிற்கான
இணைப்புகள் விரைவில் கிடைக்குமென நம்புகிறேன். இவற்றைச் சரி பார்த்துப் பின், இச்செயற்பாட்டில் நீங்களும் முயன்று
பார்க்கலாம்.
நான் நடாத்தும் இணையப் பயிலரங்கக் காணொளிகளைக் கீழே பார்க்கவும்.
மரபுக்கவிதைப் பயிலரங்கம் - தொகுப்பு - 02 - தொடர் - 03
மரபுக்கவிதைப் பயிலரங்கம் - தொகுப்பு - 02 - தொடர் – 04