நாலறிவைக்
கற்றிருந்தால் நல்வேலை நல்வருவாய்
நாலாள்கள்
உன்னைச்சுற் றி.
(ஒரு விகற்பக் குறள் வெண்பா)
நாலறிவைக் கற்றவராம்
தானுலகைச் சுற்றுவராம்
நாலறிவு கற்காதார்
வீண்.
(ஒரு விகற்பக் குறள் வெண்பா)
நாலறிவைக்
கற்றிருந்தால் தான்பார் நடுத்தெருவில்
நாலாள்கள் உன்னைமதிப்
பார்.
(ஒரு விகற்பக் குறள் வெண்பா)
நாலறிவை நானறியேன்
நாடெங்கும் பேசுகிறார்
நாலறிவாம் நானறியச்
சொல்.
(ஒரு விகற்பக் குறள் வெண்பா)
நாலறிவைக்
கற்றிருந்தால் தான்
நல்ல
நிலைக்கு உயரலாமென
நாலாள்கள்
சொல்லித்தான் தெரிந்தாலும்
நானறியேன்
அந்த நாலறிவை!
ஐம்புலனால்
புரிகின்ற அறிவாம்
ஐந்தறிவாம்
- ஆங்கே
உள்ளத்தால்
உணருகின்ற அறிவாம்
ஆறாம்
அறிவாம் - அப்பால்
படித்தறிவு, பட்டறிவு என்றுரைக்க
எட்டறிவைத்
தான் - நானும்
எண்ணிப்
பார்க்கிறேன் - அந்த
நாலறிவைத்
தான் நானறியேன்!
ஒழுக்கமுடன்
நன்றே படித்தல்
விருப்புடன்
நல்ல தொழில் பார்த்தல்
நாலுபணம்
தேடிவைத்துப் பேணுதல்
ஊருக்கு
நல்லெடுத்துக் காட்டாய் வாழுதல்
என்றெல்லாம்
மூதறிஞர் சொல்லி வைச்சது
நானறியாத
அந்த நாலறிவு என்றறியேன்!
வணக்கம்
பதிலளிநீக்குபதிவு சிறப்பாக உள்ளது படித்து மகிழ்ந்தேன் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
நன்றி
அன்புடன்
ரூபன்
நாலறிவை நானும் அறிந்திலேன்
பதிலளிநீக்குநாலறிவை நீவிர் சொன்னதனால் அறிந்துகொண்டேன்.
அருமை ஐயா.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
அருமை... வாழ்த்துகள்...
பதிலளிநீக்குஇளமையில் நாலறிவைக் கற்க வழியில்லை..முதுமையில் கற்று வருகிறேன்..
பதிலளிநீக்கு