Translate Tamil to any languages.

செவ்வாய், 12 நவம்பர், 2019

ஆழ் துளைக் கிணற்றில்


கண்ணீர்!


வாழையடி வாழையாக
ஆளுக்காள் சொல்லுறாங்க...
கண்ணாதாசனும் சொன்னதாக
சொல்லிக்கொள்கிறாங்க...
தென்னையை நட்டு வளர்த்தால்
இளநீர் குடிக்கலாமாம்...
பனையை நட்டு வளர்த்தால்
பதநீர் குடிக்கலாமாம்...
பிள்ளையைப் பெத்து வளர்த்தால்
பெற்றவர்கள் கண்ணீர் வடிப்பினமாம்...
இதெல்லாம்
முதியோர் இல்லத்து மூத்த மூதாட்டி
முழங்கியதை நான் சொன்னேன்!
அடேய்! பிள்ளைகளே!
முதியோர் இல்லத்தில தான் - உங்களை
பெற்றவர்கள் தான் கண்ணீர் வடித்தால்
நீங்கள்
எங்கேனும் தான் மகிழ்வாக வாழ்வீரோ?




ஆழ் துளைக் கிணற்றில்



இந்தியா - தமிழ்நாடு
மணப்பாறை - சுஜித்
ஆழ் துளைக் கிணற்றில்
வீழ்வதற்கும்
மீட்கமுடியாமைக்கும்
இந்தியத் தொழில் நுட்ப வல்லுநர்கள்
பதில் தரமுடியாவிட்டாலும்
குழந்தை சுஜித்
"இனியாவது இப்படியாவது நிகழாது
முற்காப்பில் கவனம் தேவை" என
உலகிற்கு ஒரு செய்தியை
சொல்லிச் சென்றிருப்பதை உணருவோம்!
குழந்தை சுஜித் இழப்பு
எவராலும் தாங்கிக்கொள்ள
இயலாது போனாலும் கூட
பாதிக்கப்பட்ட உள்ளங்களோடு
எனது துயரையும் பகிருகிறேன்!
அப்துல் கலாம் அவர்களை ஈன்ற
தமிழகமே விழித்தெழு...
இனியும் இந்தியா தூங்கினால்
நாம் இன்னும்
எத்தனையோ உயிரை இழக்க நேரிடுமே!




முயன்று பாருங்கள்!

ஒவ்வொருவருக்குள்ளும்
ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்டோ
கலையாற்றல் இருக்கிறது.
எவரெவரோ
தன் தன் கலையாற்றலை
தாமாக உணர்ந்து
வெளிக்கொணர முற்படுகிறாரோ
அவர் தானே கலைஞர் ஆகின்றார்!
தம்பி, தங்கைகளே
உங்களுக்குள்ளும் கலையாற்றல் இருக்கு
நீங்களும் அதனை வெளிப்படுத்தினால்
கலைஞர் ஆகலாமே!
அக்காள் தேனீர் நீட்டினாள்
குவளையைத் தூக்கினேன்
குவளைச் சூட்டிலே கையை விட்டிட்டேன்
"அக்காள் தந்த
தேனீர் குவளைச் சூட்டிலே
நானும் கையை விட்டதால்
சுட்டுக் கொண்டிருந்த தேனீர்
காலில் விழுந்து காலைச் சுட்டதே!" என
நானெழுதியதைக் கண்டவர் சிலர்
கவிதை மாதிரி இருக்கென்றனர்.
உங்களுக்கும் இப்படி ஏதும்
பட்டறிவு இருந்தால் போதுமே
"சுட்ட தண்ணீர் பேணியில
தொட்ட கையை விட்டதால்
பட்ட கால் பொக்களித்ததே!" என
நீங்களும் எழுதலாம் தானே!
முயன்றால் முடியாதது ஏது?
உங்கள் கலையாற்றலை
நீங்களே வெளிக்கொணர முயன்றால்
நீங்களும் கலைஞர்கள் தானே!

2 கருத்துகள் :

  1. சுஜித்திற்குப் பின்னும் இரண்டு குழந்தைகள் ஆழ்துளைக் கிணற்றில் இந்தியாவில் விழுந்திருக்கின்றன. தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்போம் பலன் கிடைக்கும். இரண்டாவது பதிவிலே நிச்சயமாக முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பது உண்மை என்பது புலப்படும்

    பதிலளிநீக்கு
  2. ஆழ்துளை துயரம் அதிர்ச்சியைத் தருகிறது. என்றுதான் நல்ல முடிவு வரப்போகிறதோ?

    பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!