Translate Tamil to any languages.

திங்கள், 5 நவம்பர், 2018

உள்ளத்தில் உருளும் வரிகள்



ஒரு வரி எண்ணங்கள்

1. பணம் விரும்பிகள் உறவுகளை அணைக்கமாட்டார்களே!

2. பிச்சை எடுத்தாலும் நம்பிக்கையைக் காப்பாற்றுபவரே நல்லவர்!

3. அன்பும் காதலும் ஒன்றாயினும் வாழ்க்கை வேறாகிறதே!

4. நல்லவராயினும் கெட்டவராயினும் பார்ப்பவர் பார்வையில் தானே!

5. அன்பாலே மதிப்பளித்தோருக்குத் தானே ஊரே திரண்டு வருமே!

இரு வரி எண்ணங்கள்
1
ஊருக்குள்ள மழை வந்து வெள்ளம் பெருகி
ஏழைகளின் கொட்டில் வீடுகளைத் தின்கிறதே!
2
நாளுக்கு நாள் கடலலைகள் கரையைத் தேடி
கரையோர மண்ணைக் கடலுக்கு இரையாக்குகிறதே!
3
அழகை, அறிவைப் பேணும் வாலைகள் கூட
காளைகள் கேட்கும் கொடுப்பனவுக்கு வழியின்றி சாவு!
4
தமிழருக்குள் ஒற்றுமை ஏற்பட வாய்ப்பின்றி
தமிழினமே தலைநிமிர வழியின்றி சீரழிகின்றதே!
5
கரைகின்ற காலமும் நேரமும் மீளக் கிடைக்காது
மீளக் கிடைக்காத பொழுதிற்குள் வாழ்ந்திடணுமே!

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!