படிப்புக்கு எவ்வளவு பெறுமதி?
படிக்கப்
பின்வாங்கும் உள்ளங்களே!
படிக்கத்
தொடங்கும் வேளை
புளிக்கிறதா?
- பரவாயில்லை
படிக்க முயன்று
பாருங்கள்...
கொஞ்சம்
படித்த பின்னே
படிப்பது
சுகமே என
படிக்கப்
படிக்க இனிக்கிறதே என
நீங்களாகவே
விரும்பிப் படிப்பீர்களே!
சின்னப்
பிள்ளையாக இருக்கையிலே
படிப்புக்குப்
பின்னடித்த நானே
பொத்தகக்
கடையையே வீட்டிலிறக்கியே
இனிக்க இனிக்கப்
படிக்கிறேனே!
தம்பி! தங்கைகளே!
- இன்று
புளிக்கின்ற
படிப்புத் தானே - நாளை
இனிக்கும்
படிப்பு ஆகிறதே! - நீ
படித்த படிப்புத்
தானே - நாளை
உனக்கென்ற
தனி அடையாளத்தை
நிலைநிறுத்தப்போகிறதே!
- அதுவே
உலகம்
உன்னை நாடவைக்க
உதவப்போகிறதே!
அது மட்டுமா?
- நம்ம
உயிர் பிரியும்
வரை
"எவ்வளவோ
பெரிய படிப்பெல்லாம்
படித்தவர்" என்ற
பேச்சுக்குக்
குறைவில்லைப் பாரும்!
படித்தவருக்கு எவ்வளவு பெறுமதி?
படிப்புக்கான
தகுதியே
சான்றிதல்களின்
பட்டங்களின்
எண்ணிக்கை - அது
படிப்பின்
அளவுகோல் என்பேன்!
படித்தமைக்கான
தகுதியே
படித்ததைப்
பயன்படுத்திய
மக்களின்
எண்ணிக்கை - அது
படித்தவரின்
அளவுகோல் என்பேன்!
படிப்பைக்
காட்டித்திரிவதை விட
படித்ததைப்
பலரும் பயனீட்ட வழங்கினாலே
படித்தவரென
மக்கள் பாராட்டுக் கிட்டுமே!
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!