படைப்பின் கமுக்கம் (இரகசியம்)
கடவுள் மனிதனைப் படைத்தார் - அத்துடன்
அவரது பணி முடிந்து விட்டது - அடுத்து
ஆக்குவதும் அழிப்பதும் மனிதன் தான் - அதன்
விளைவுகளைச் சந்திப்பதும் மனிதன் தான் - அதற்கான
அத்தனையும் மனிதனுக்குள் படைத்தவர் கடவுளே!
கடவுளும் அஞ்சுவார்!
ஒரு பக்கத்தில்
எம்மை விழவைத்து
வேடிக்கை
பார்க்கும் ஆள்கள்
மறு பக்கத்தில்
விழவைக்கும்
வீதிகளின் நிலை
நடுவே நாளும்
விழுந்தெழும்பிப்
பயணிக்கும்
நம் வாழ்க்கையை
தன்னம்பிக்கையோடு
ஏற்று
வாழத் துணிந்து
விட்டால்
கடவுளும்
உன்னைக்
கண்டு அஞ்சுவார்!
பின் விளைவு
அன்று
குப்பையில் போட்ட குண்டு மணியும்
ஒரு நாள் தேவைப்படலாம்!
இன்று
என்னைச் செத்துப் போனானென்று
குப்பையில் போட்ட குண்டு மணியும்
ஒரு நாள் தேவைப்படலாம்!
இன்று
என்னைச் செத்துப் போனானென்று
கழித்துவிட்டவர்களும் ஒதுக்கிவைத்தவர்களும்
காலில் விழுந்து வணங்குகின்றனர்!
ஓ! உறவுகளே!
காலமும் நேரமும் தேவையும்
ஒன்றிணைந்துவிட்டால்
குப்பையில் போட்ட எம்மையும்
தேவையெனத் தேடியலைவோர் இருக்கலாம்!
என்றும்
எமது தன்னம்பிக்கையே
எல்லோரையும்
எங்கள் காலில் விழவைக்கிறதே!
காலில் விழுந்து வணங்குகின்றனர்!
ஓ! உறவுகளே!
காலமும் நேரமும் தேவையும்
ஒன்றிணைந்துவிட்டால்
குப்பையில் போட்ட எம்மையும்
தேவையெனத் தேடியலைவோர் இருக்கலாம்!
என்றும்
எமது தன்னம்பிக்கையே
எல்லோரையும்
எங்கள் காலில் விழவைக்கிறதே!
அன்னம் போல உன் வண்ணம்
தம்பி
செய்தி தெரியுமோ?
நீரை
விலக்கிப் பாலைக் குடிக்கிற
அன்னம்
போல - நீயும்
தீயதை
விலத்தி
நல்லதைத்
தெரிந்தெடுக்கிறியா?
தங்கச்சி
செய்தி தெரியுமோ?
நீரை
விலக்கிப் பாலைக் குடிக்கிற
அன்னம்
போல - நீயும்
தீயவர்களை
விலத்தி
நல்லவரைத்
தான் காதலிக்கிறாயா?
தம்பிமாரே,
தங்கைமாரே
நீரை
விலக்கிப் பாலைக் குடிக்க
அன்னத்திற்குக்
கற்றுக் கொடுத்தது யார்?
உங்களாலே
நீங்களும்
தீயதை,
தீயவர்களை, தீமை செய்வதை
விலக்கி
வைத்துவிட்டு
நல்லதை,
நல்லவர்களை, நன்மை செய்வதை
தெரிந்தெடுத்து
வாழ்ந்து காட்டினால்
நீங்களும்
உலக மக்கள்
போற்றும்
உண்மையான ஒருவர் ஆவீரே!
உன் செயல்
"ஆயிரம் நண்பர்களை
உருவாக்கினாலும்
ஓர் எதிரியையேனும்
ஓர் எதிரியையேனும்
உருவாக்கிவிடாதே!" என்பது
பாவரசர் கண்ணதாசனின் எண்ணம்!
அப்படியாயின்
நண்பர்களையும் எதிரிகளையும்
நாம் தானே உருவாக்குகிறோம்!
எதிரிகளை உருவாக்காமல்
நல்ல நண்பர்களை உருவாக்கினால்
எதிர்காலத்தில்
நன்மைகள் பல நாடி வருமே!
பாவரசர் கண்ணதாசனின் எண்ணம்!
அப்படியாயின்
நண்பர்களையும் எதிரிகளையும்
நாம் தானே உருவாக்குகிறோம்!
எதிரிகளை உருவாக்காமல்
நல்ல நண்பர்களை உருவாக்கினால்
எதிர்காலத்தில்
நன்மைகள் பல நாடி வருமே!
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!