Translate Tamil to any languages.

ஞாயிறு, 10 செப்டம்பர், 2017

2017 தமிழகம் - கன்னியாகுமரி பயணம்

2015 மாசி தமிழகப் பயணப் பதிவே இன்னும் எழுதி முடியவில்லை. அப்படி இருக்கையில் 2017 கன்னியாகுமரிப் பயணம் பற்றி நீண்டதாக எழுத முடியவில்லை. ஆகையால், சுருக்கமாகச் சொல்லி முடிக்கிறேன்.

நான் இந்தியாவில் இறங்கி முதலில் 29/08/2017 அன்று Discovery Book Palace இல் பரிசில் வழங்கல் ஏற்பாடுகள் செய்திருந்தேன். எனக்கு வேண்டிய நூல்களையும் பெற்றேன்.


அடுத்ததாக 30/08/2017 அன்று வடலூர் வள்ளலார் நினைவாலயத்தில் அமைதியாகச் சில மணித்துளிகள்...

அடுத்ததாக 31/08/2017 அன்று கன்னியாகுமரி காந்தி நினைவாலயத்திலும் அரும்பொருட் காட்சியகத்தில் ஐந்து முகப்பிள்ளையாருடனும் நெருங்கி நின்றேன்.



அடுத்ததாக 31/08/2017 அன்று கன்னியாகுமரி 133 அடி உயர வள்ளுவர் சிலையைப் பார்க்கச் சென்ற வேளை படகில் ஏறும் காட்சி மற்றும்
சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த பாறைக்கு ஏறிய வேளை...
வள்ளுவர் சிலை திருத்தப் பணி காரணமாக அருகே செல்ல முடியவில்லை.

எனது இந்தியப் பயணத்தின் இலக்கு, தமிழ்நண்பர்கள்.கொம் தள நிறுவுனரும் தமிழ் பற்றாளரும் நான் வலையுலகில் சிறந்த விளங்க அடித்தளமிட்டுத் தந்தவருமான வினோத் - கன்னியாகுமரி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்வதாகும்.

01/09/2017 அன்று அந்நிகழ்வில் எனக்குச் சால்வை அணிவித்து மதிப்பளித்தனர். அடுத்து நண்பர் சுஷ்ரூவாவின் கவிதை வாசித்த வேளை... அடுத்து வினோத் - கன்னியாகுமரி அவர்களின் கவிதை நூலினை வெளியிட்டு வைத்து, நூல் பற்றிய ஆய்வுரையையும் வழங்கினேன்.

அடுத்து நண்பர் கார்த்திகேயன் நினைவுச் சின்னங்களை வழங்கி மதிப்பளிக்கின்றார். இந்நிகழ்வில் தமிழ்நண்பர்கள்.கொம் அறிஞர்கள் பலர் நினைவுரை ஆற்றினர். இந்நிகழ்வினை தமிழ்நண்பர்கள்.கொம் தள மேம்பாட்டுக் குழுவினர் சிறப்பாக ஒழுங்கமைத்து நடாத்தினர்.


02/09/2017 அன்று கன்னியாகுமரி நண்பர் ஜூயின் அவர்கள் இல்லம் சென்றிருந்தேன். அவர் தமிழ்தோட்டம் - கருத்துக்களம் (http://www.tamilthottam.in/forum) நடாத்துகிறார். மேலும் பேச்சிப்பாறை-தொட்டில்பாலம் சுற்றிக்காட்டினார். ஒரு மலையில் இருந்து அடுத்த மலைக்கு நீர் பாய்ச்சப் பெரும் தலைவர் காமராஜர் அவர்களால் இப்பாலம் கட்டப்பட்டதாம்.


05/09/2017 அன்று மடிப்பாக்கம் சென்று தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களைச் சந்தித்தேன். அவர் எனக்கு மதிய விருந்தும் பரிசில் பொருள்களும் தந்திருந்தார்.


அன்று மாலை தமிழறிஞர் இலக்குவனார் அவர்களது நினைவு நிகழ்வில் கலந்து கொள்ள அழைப்புத் தந்திருந்தார். அந்நிகழ்வில் இலக்குவனார் அவர்களது தமிழ் பணியை விளக்கிக் கவிஞர்கள் பாமழை பொழிந்தனர்.

அந்நிகழ்வில் எனக்கு சால்வை அணிவித்து மதிப்பளித்திருந்தனர். அந்நிகழ்வில் தமிழறிஞர் சந்திரகௌரி சிவபாலன் அவர்களது ஆய்வுக்கட்டுரை நூலும் தமிழ்பற்றாளன் வினோத் - கன்னியாகுமரி அவர்களது கவிதை நூலும் அறிஞர்கள் பலருக்கு வழங்கி இருந்தேன்.
இத்தனைக்கும் இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.


தமிழறிஞர் சந்திரகௌரி சிவபாலன் அவர்களது ஆய்வுக்கட்டுரை நூலும் தமிழ்பற்றாளன் வினோத் - கன்னியாகுமரி அவர்களது கவிதை நூலும் மேலும் பல அறிஞர்களுக்கு வழங்க முயன்று இருந்தேன்; முடியவில்லை. ஆயினும், அவர்களுக்கு விரைவில் அனுப்பிவைப்பதாக உறுதியளித்துள்ளேன்.


அடுத்து இந்தியா வரும் போது மேலும் பலரைச் சந்திக்க வாய்ப்புண்டு. நமது உறவு தொடரும்

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!