Translate Tamil to any languages.

திங்கள், 27 ஜூன், 2016

கருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!

'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் ஆள்கள்; உங்களுக்கு தெரிந்த ஒரு குழுவினர் தான், அவர்கள் புதிய வலைத்திரட்டியை அறிமுகம் செய்ய இருக்கிறார்களாம். கீழுள்ள இணைப்பைச் சொடுக்கிப் பார்த்த பின்னர், இணைந்து கொள்ளுங்கள்.

ஏற்கனவே பல திரட்டிகளுக்கு மூச்சுப் போயிற்று, இருக்கிற சில மூச்சுப் போகும் நிலையில் நொந்து போய் இருக்கின்றன. இந்த வேளை பார்த்துத் தலையைக் காட்டும் ஊற்று - வலைத்திரட்டிக்கு ஐந்தாறு வலைப்பதிவர்களை இணைத்துக்கொடுக்க ஊருக்க உலாவினால், எல்லோரும் முகநூல் பக்கம் பாய்ந்து போயிட்டார்களாம்.

இதனால், சகலரும் ஒரு உண்மையை அறியுமாறு வேண்டிக்கொள்கின்றேன். முகநூல் பக்கம் உலாவும் பதிவர்களை விட வலைப்பூக்களைப் பேணும் பதிவர்கள், தரமான பதிவர்கள் என்பதே அந்த உண்மை! அதாவது வலைப்பூக்களைப் பேணத் தகுதி அதிகம் தேவைப்படுகிறது என்பதும் உண்மையே! சிறந்த பதிவை அல்லது தரமான பதிவை நம்பியே வலைப்பூக்களை நாடும் வாசகர் உள்ளனர்.

நீலாவதி (Neelavathi Neela) நீலா என்னும் கூகிள்+ நண்பர் தனியாகப் பொருள் தரும் 45 தமிழ் எழுத்துகளை அறிமுகம் செய்திருக்கிறார். கீழுள்ள இணைப்பைச் சொடுக்கிப் பார்க்கவும்.

தனியாகப் பொருள் தரும் 45 தமிழ் எழுத்துகளையும் பாவித்துத் தமிழை அழகுபடுத்தும் பதிவர்கள் முகநூலை விட வலைப்பூக்களில் தான் அதிகம் உலாவுகின்றனர். ஏனெனில் தரமான படைப்பாளிகளை வலைப்பூக்களில் தான் அதிகம் காணலாம். ஆயினும், கூகிள்+, முகநூல் பக்கங்களிலும் தரமான படைப்பாளிகள் தங்களை அடையாளப்படுத்துகின்றனர்.

எப்படி இருப்பினும் வலைப்பூக்களின் நிறம் தெரியாதோரும் வாசகர் இன்றி வலைப்பூக்களைப் பேண முடியாதோரும் முகநூல் பக்கங்களில் உள்ளனர் என்று சொல்லிவிட முடியாது. அறிந்தவர், தெரிந்தவர், உறவுக்காரர் எல்லோரும் வாசகராகலாம் என முகநூல் பக்கம் தாவுவோர் இருக்கலாம்.
எனவே,
சிறந்த பதிவை அல்லது தரமான பதிவை நம்பியே
வலைப்பூக்களை நாடும் வாசகரை நம்பியே
வலைப்பூக்களைப் பேணும் பதிவர்களே
சிறந்த படைப்பாளிகள்! - ஆயினும்
முகநூலிலும் சிறந்த படைப்பாளிகள்
சிலர் இருக்கலாம் - எல்லோருமல்ல!

நகைச்சுவையாக நண்பர்கள் கூறியது:
முதலாம் நண்பர்: அன்று வலைப்பூக்களில் பதிவைப் பதிவு செய்த பின்னர், முகநூல் வாசகரை ஈர்க்க முகநூலில் இணைப்பைப் பகிர்ந்தோம்.
இரண்டாம் நண்பர்: இன்று முகநூலில் பதிவைப் பதிவு செய்த பின்னர், அதன் இணைப்பை வலைப்பூக்களில் பகிரும் நிலை வந்தாச்சே!

காலம் இப்படி மாறிப்போச்சண்ணே! எப்படிச் சொன்னாலும் வலைப்பூக்களைப் பேண புதிய பதிவர்களை உருவாக்க வேணும் போல கிடக்கு. அதுவரை வலைப்பூக்களைப் பேணும் பதிவர்களே சிறந்த படைப்பாளிகள்! அது தானே அக்கா உண்மை!

மாற்றுக் கருத்து இருப்பின் முன் வையுங்க பார்ப்போம்!
கருத்து மோதல் வலுக்கட்டும் பார்ப்போம்!

முடிவு வாசகர் உள்ளத்திலே!

35 கருத்துகள் :

  1. முக நூலில் அதிகம் பேர் வாசிக்கிறார்களாக இருக்கும் என்றாலும் வலைப்பூவில் எழுதுவதால் நல்ல கருத்துகள் பரிமாறப்படுகின்றன என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்துகளைப் பணிவோடு ஏற்றுக்கொள்கின்றேன். முகநூல் பயனர்கள் அதிகம் தான். கூகிள் தேடல் வழியாக வலைப்பூப் பக்கம் வருவோரும் உள்ளனர். முகநூல் வாசகர்களில் குடும்ப உறவுகளும் நட்புகளும் இருக்கலாம். ஆனால், நல்ல கருத்துகளைத் தேடும் வாசகர்களையே வலைப்பூப் பக்கம் அதிகம் காணலாம். எனது தளத்திற்கு வருகை தந்து. சிறந்த கருத்தை முன்வைத்தமைக்கு நன்றி.

      நீக்கு
  2. வணக்கம். அருமையான பதிவு. முதலில் முகநூல் என்ற சொல்லைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். காரணம் பேஸ்புக் என்பது பெயர்ச்சொல். ஆகவே இதனை மொழி பெயர்க்க முடியாது.

    இரண்டாவது வலைப்பூக்கள் மற்றும் பேஸ்புக் இரண்டிலும் தரமான பதிவர்கள் உள்ளனர். என்றாலும் பதிவர்களின் தரம் வலைப்பூக்களிலேயே வெளிப்படையாக அடையாளம் காணக்கூடியதாக உள்ளது. பேஸ்புக் பதிவுகள் பெரும்பாலும் விருப்பு வாக்குகளுக்காகவே வெளியிடப்படுகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்போது நன்பரே ’பேஸ்’ தமிழானது? பேஸ் இற்கு தமிழ் பெயர் முகம் அல்லவோ?

      தமிழர்கள் தமிழில் எழுதுவது நல்லதல்லவோ?

      நீக்கு
    2. அறிஞர் மணிமேகலா அவர்களின் பதிலை நானும் வரவேற்கின்றேன். எனது தளத்திற்கு வருகை தந்து, அறிஞர் சிகரம் பாரதிக்குத் தக்க பதில் தந்தமைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
    3. வணக்கம்!
      சிகரம் பாரதி அவர்களே! Facebook என்பது பெயர்ச் சொல் தான். அதன் தமிழ் வடிவம் தான், முகநூல் அல்லது முகப்பொத்தகம். இதனையும் பெயர்ச் சொல் ஆகக் கருதலாம். இப்பெயர் உலகலாவ ஏற்றுக்கொள்வதால், மாற்றுக் கருத்தை என்னால் முன்வைக்க இயலாமல் இருக்கு.

      தங்கள் இரண்டாவது கருத்தைப் பணிவோடு ஏற்றுக்கொள்கின்றேன். இரண்டிலும் தரமான பதிவர்கள் உள்ளனர் தான். ஆனால், தரமான பதிவர்களால் மட்டுமே வலைப்பூவை வெற்றிகரமாக நடாத்த முடிகிறது. ஆயினும், முகநூலில் எவரும் இணையும் வாய்ப்பு இருக்கிறதே.முகநூலில் உறவுக்காரங்களும் விருப்பு வாக்குப் போடலாம். ஆனால், வலைப்பூவில் உண்மை வாசகர் மட்டுமே விருப்பு வாக்குப் போடலாம். எனது தளத்திற்கு வருகை தந்து. சிறந்த கருத்தை முன்வைத்தமைக்கு நன்றி.

      நீக்கு
  3. வலைப்பூக்கள் மற்றும் பேஸ்புக் இரண்டிலும் தரமான பதிவர்கள் உள்ளனர். என்றாலும் பதிவர்களின் தரம் வலைப்பூக்களிலேயே வெளிப்படையாக அடையாளம் காணக்கூடியதாக உள்ளது. பேஸ்புக் பதிவுகள் பெரும்பாலும் விருப்பு வாக்குகளுக்காகவே வெளியிடப்படுகின்றன. இந்த கருத்தே என்கருத்தும்
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்துகளைப் பணிவோடு ஏற்றுக்கொள்கின்றேன். முகநூல், வலைப்பூ ஆகிய இரண்டிலும் சிறந்த பதிவர்கள் உள்ளனர். ஆனால், முகநூலில் உள்ள எளிமை வலைப்பூவில் இல்லை. அதனால், தாங்கள் சொன்னது போல பதிவர்களின் தரம் வலைப்பூக்களிலேயே வெளிப்படையாக அடையாளம் காணக்கூடியதாக உள்ளது. எனது தளத்திற்கு வருகை தந்து. சிறந்த கருத்தை முன்வைத்தமைக்கு நன்றி.

      நீக்கு
  4. வலைப்பூ நிரந்தரமானது! முகநூலில் ஆயிரம் லைக் கிடைத்தாலும் வலைப்பூவில் கிடைக்கும் ஒரு கருத்துரை சிறப்பானது. வலைப்பூவில் நமது எழுத்துக்களை சேமிக்க முடியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்துகளைப் பணிவோடு ஏற்றுக்கொள்கின்றேன். முகநூல், வலைப்பூ இரண்டும் நிரந்தரமானது தான்! இரண்டிலும் நமது எழுத்துகளை சேமிக்க முடியும்.
      முகநூலில் பழைய பதிவுகள் விரைவில் மறைந்துவிடும்; வலைப்பூப் பதிவுகள் எல்லாம் எப்போதும் பார்க்க முடியும். எனவே, வலைப்பூவைச் சிறந்த ஆவணத் தொகுப்பாகப் பேண முடிகிறது. ஆயினும், முகநூலில் அப்படியான சிறப்பு இல்லை. வலைப்பூவில் கிடைக்கும் கருத்துரைகள் சிறப்பானதுக்குக் காரணம் தரமான வாசகர்கள் வருகை தான்! எனது தளத்திற்கு வருகை தந்து. சிறந்த கருத்தை முன்வைத்தமைக்கு நன்றி.

      நீக்கு
  5. வலைப்பூ-நாவல், முகபுத்தகம்-சிறுகதை, குருவி-ஏவுகணை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்துகளைப் பணிவோடு ஏற்றுக்கொள்கின்றேன். வலைப்பூவைத் தொடர்கதை (நாவல்) என்பதா? வலைப்பூப் பதிவுகள் எல்லாம் எப்போதும் பார்க்க முடியும். எனவே, வலைப்பூவைச் சிறந்த ஆவணத் தொகுப்பாகப் பேண முடிகிறது என்பதே சரி! முகப்புத்தகத்தை சிறுகதை என்பதா? முகநூலில் பழைய பதிவுகள் விரைவில் மறைந்துவிடும்; எந்தப் பதிவும் குறுகிய காலத்திற்குத் தென்படுகிறது என்பதே சரி! எனது தளத்திற்கு வருகை தந்து. சிறந்த கருத்தை முன்வைத்தமைக்கு நன்றி.

      நீக்கு
  6. வலைப்பதிவில் முன்பே எழுதிய பல இடுகைகள் தான் முகநூல் உள்ளிட்ட பல தளங்களிலும் மீள்பதிவாக இடப்படுகிறன்றன. வலைப்பதிவில் எழுதுவது கூகுள் தேடலில் இணையத்துக்க இணையாகக் கிடைக்கிறது ஆனால் முகநூலில் அப்படிக் கிடைப்பதில்லை அதனால் எனது வாக்கு வலைப்பதிவுக்குத்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்துகளைப் பணிவோடு ஏற்றுக்கொள்கின்றேன். "வலைப்பதிவில் முன்பே எழுதிய பல இடுகைகள் தான் முகநூல் உள்ளிட்ட பல தளங்களிலும் மீள்பதிவாக இடப்படுகிறன்றன" என்பது உண்மை தான். வலைப் பதிவுகளை மீள்பதிவு (Reblog) செய்யலாம். ஆனால், அவ்வாறு அனேகர் பகிருவதில்லை. முகநூலில் எவர் பதிவையும் எவரும் பகிரும் (Share) வசதி உண்டு. ஆகையால், வலைப்பதிவுக்குத் தனிச் சிறப்பு அடையாளம் உண்டு. கூகுள் தேடலில் முகநூல் பதிவுகள் தலையைக் காட்டினாலும் வலைப்பூப் (Blog) பதிவுகள் தான் அதிகம் நிரல் (List) படுத்தப்படுகிறது. தங்களைப் போன்று வலைப்பதிவுக்குத் தான் எனது வாக்கு! எனது தளத்திற்கு வருகை தந்து. சிறந்த கருத்தை முன்வைத்தமைக்கு நன்றி.

      நீக்கு
  7. வலைப்பூ என்பது சொந்தவீடு மாதிரி
    பேஸ்புக் என்பது வாடகைவீடு மாதிரி

    நல்ல பதிவர்கள் பலரும் இன்று பேஸ்புக்காவது பரவாயில்ல வாட்ஸ்-அப்பில் மூழ்கி விட்டது வேதனையான விடயமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்துகளைப் பணிவோடு ஏற்றுக்கொள்கின்றேன். வலைப்பூவில் பதிந்த பதிவுகள் யாவும் முழுமையாகக் காணமுடிவதையும் முகநூலில் பதிந்த புதிய பதிவுகளையே முழுமையாகக் காணமுடிவதையும் வைத்து "வலைப்பூ என்பது சொந்தவீடு மாதிரி, முகநூல் (பேஸ்புக்) என்பது வாடகைவீடு மாதிரி" என்று அழைக்கிறீர்கள். முகநூல் (பேஸ்புக்) பக்கம் போனால் பரவாயில்லை, நல்ல பதிவர்கள் பலரும் இன்று பயன்பொருள் (வாட்ஸ்அப்) பக்கம் மூழ்கி விட்டது வேதனை தான்... தங்கள் வெளியிட்ட வேதனைக்கான சான்றாகக் கீழ்வரும் இணைப்பைப் பகிருகிறேன்
      http://tthamizhelango.blogspot.com/2016/06/blog-post_30.html
      எனது தளத்திற்கு வருகை தந்து. சிறந்த கருத்தை முன்வைத்தமைக்கு நன்றி.

      நீக்கு
  8. உங்கள் கருத்து மோதலைப் பார்த்தேன். உண்மையைச் சொல்வதானால் அறிவுத்தேடுதல் உள்ள வாசகர்கள் புத்தகம், முகநூல், வலைத்தளம் எது என்றாலும் வாசிப்பார்கள். எங்கெகென்றாலும் எழுத்தை ஆளும் எழுத்தாளர்கள் வாசகர்களின் அறிவுப்பசிக்கு விருந்து வைப்பதே நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்துகளைப் பணிவோடு ஏற்றுக்கொள்கின்றேன். "எங்கென்றாலும் எழுத்தை ஆளும் எழுத்தாளர்கள் வாசகர்களின் அறிவுப்பசிக்கு விருந்து வைப்பதே நன்று." என்பதை வரவேற்கிறேன். முகநூலில் பதிவு இடுவோரை விட வலைப்பூவில் பதிவு இடுவோரைச் சிறப்பாக அடையாளம் காணலாமே! எனது தளத்திற்கு வருகை தந்து, சிறந்த கருத்தை முன்வைத்தமைக்கு நன்றி.

      நீக்கு
  9. பேஸ்புக் கில் படைப்புகலுக்கு பாதுகாப்பில்லை யாரும் எவரின் பதிவையும்
    பதியலாம் . உரிமை கொண்டாடமுடியாது . வலைப்பதிவு உறுதியன உண்மையான உழைப்பை
    எடுத்து காட்டும்
    நன்றி

    பதிலளிநீக்கு
  10. ஃபேஸ்புக்கில் வசதி உடனடி லைக் தான். நிறைய பேர்கள் இரண்டு இடங்களிலும் வெற்றிகரமாக இயங்குகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  11. வலைப்பூவில் தொடர்பாளர்கள் மாதிரி ஃபேஸ்புக்கில் அறிமுகங்கள்ஃபேஸ்புக்கில் வரும் லைக்குகள்பதிவு கண்களில் பட்டது என்பதைக்காண்பிக்கவே வலைப்பூவிலும் நிறைவாகக் கருத்து இடுவோர் குறைந்து வருகின்றனர்

    பதிலளிநீக்கு
  12. சிந்தனையில் நீங்காத கருத்துக்கள் வலைப்பூவில்தான் வருகின்றன. ஃபேஸ்புக்கில், அந்த நேரத்துக்கு ஒரு நெகிழ்வையோ, மகிழ்வையோ, கிளர்ச்சியைத் தரும் படைப்புகள் தான் அதிகமாக வருகின்றன என்பதை மறுக்க முடியாது. வலைப்பூ பதிவுகள் என்பது அன்றைய இளையராஜா இசைபோல... ஃபேஸ்புக்கில் வரும் பதிவுகள் இன்றைய இசை போல...

    வலைப்பூ என்பது வீட்டுச் சாப்பாட்டை ஒரு கட்டு கட்டுவது போல...ஃபேஸ்புக் பதிவுகள் துரித உணவகத்தில் சாப்பிடுவது போல...
    இதற்கான காரணங்களும் உள்ளன. போல கைபேசியில் எளிமையாக பயன்படுத்தக் கூடிய வகையில் வலைப்பூவிற்கு மென்பொருள் கருவிகள் (tools) அதிகம் இல்லை.

    பதிலளிநீக்கு
  13. நல்லதொரு விடயத்தை முன்வைத்து விவாதப் பொருளாக்கி இருக்கிறீர்கள். நன்றி.
    மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணமாகத் தான் இருக்கும். அதனை நாம் திறந்த கண்ணோட்டத்தோடு பார்ப்பது நல்லது.அது நம் மனநலத்திற்கும் நல்லது. நிறையத் தெரிவுகள் இருப்பது நல்லது தானே. அவரவர் தமக்குப் பொருத்தமான வடிவங்களை தம் வசதிக்கேற்ற படி தெரிவு செய்து கொள்ளலாம்.

    நல்லது நிலைக்கும்.
    முகப்புத்தகம் வைத்திருப்பதில்லை என்று அது வந்த பொழுதிலேயே நான் முடிவெடுத்து விட்டேன். பலரும் என்னை வற்புறுத்திய போதும் அது என் இயல்புக்கு ஒத்து வராத ஒன்று என மறுத்து விட்டேன். மாயையிலும்; தெரியாத நண்பர்களின் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதிலும்; என் நண்பர்களின் நாளாந்த வாழ்வில் என்ன நடைபெறுகின்றது என்பதை அறிவதிலும் எனக்கு ஈடுபாடு இல்லை. நேரமும் இல்லை; அதில் ஆர்வம் கூட இல்லை. எனக்கு நண்பர்கள் உயிரோட்டத்தோடு எனக்கருகிலோ அல்லது ஒரு தொலைபேசித் தூரத்திலோ வேண்டும்.
    அதன் காரணமாக வலைப்பூவில் நண்பர் பட்டியலில் எனக்கெத்தனை பேர் என்பதிலும் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. வலைப்பூவை எந்த ஒரு வலைப்பின்னலோடும் இணைத்துக் கொண்டதும் இல்லை.வலைப்பூ என் சுய திருப்திக்கானது; அதில் பயனுள்ள விடயம் வருமானால் அதனைத் தேடும் வாசகர்கள் கூகுளின் மூலமாக அங்கு வந்து என்னைக் கண்டடைவார்கள்.கண்டடைகிறார்கள். அவர்களோடு எனக்கு கருத்து ரீதியான உறவும் அன்பும் அக்கறையும் என்றென்றைக்கும் இருக்கும்.அது எனக்கு முக்கியம்.அப்படி ஒரு தரமான நண்பர் கூட்டத்தை சேர்த்து வைத்திருக்கிறேன்.
    இந்த முகப்புத்தகத்துக்கும் வலைப்பூவுக்கும் இடையில் இருக்கும் வேறுபாடுகள், நன்மை தீமைகள் பற்றி; சாதக பாதகங்கள் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் நல்லதொரு கட்டுரை எழுதி இருக்கிறார். அது ஆனந்த விகடனிலும் பிரசுரமானது. அவருடய கருத்துக்களோடு எனக்கு முழுமையான உடன் பாடு உண்டு.

    எனக்குப் பொருத்தமானதும் தேவையானதும் வலைப்பூ தான்.
    கருத்துப் பகிர அழைத்தமைக்கு மீண்டும் நன்றி.
    தமிழால் இணைந்திருப்போம்!


    பதிலளிநீக்கு
  14. எனக்கு பிடித்தது வலைப்பூ தான்... பிடித்ததில்தான் கால் பதிக்க முடியும்.. இன்னும் கால் பதிக்க முயற்சிக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  15. எனது எழுத்து அனுபவத்தில் முகநூலைவிட வலைப்பூவே சிறந்தது என்று நான் கருதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  16. நல்ல முயற்சி... தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  17. :-))) ஆரம்ப கால்த்தில் இருந்தே ப்ளஸ்தான். ‘பேஸ்புக்”இல் கணக்கு இருந்தாலும் அரிதாகத்தான் போகிறேன்!

    பதிலளிநீக்கு
  18. உண்மைதான் வலைப்பூ நம் குடும்பம் போல...முகநூல் அடுத்த குடும்பம் போல....நம் குடும்பம் தான் தரமானது என்பது மறுப்பதற்கில்லை சகோ.

    பதிலளிநீக்கு
  19. வலைப்பூவின் மினியேச்சர் பேஸ்புக் எனக்கொள்ளலாம்/

    பதிலளிநீக்கு
  20. வலைப்பூ = வீடு
    பேஸ்புக் = விடுதி
    அவ்வளவுதான் :)))

    பதிலளிநீக்கு
  21. இதில் கருத்து மாறுபாடு கொள்ள ஏதும் இல்லை ஐயா! நீங்கள் கூறுவதுதான் உண்மை.

    முகநூல், கூகுள்+ போன்ற சமூக ஊடகங்களில் மட்டுமே பதிவிடும் தரமான பதிவர்கள் நிறையவே இருக்கிறார்கள். எனக்கே தனிப்பட்ட முறையில் அப்படிச் சிலரைத் தெரியும். ஆனால், வலைப்பதிவர்களையும் சமூக ஊடகங்களில் எழுதுவோரையும் ஒப்பிட முடியாது. காரணம், சமூக ஊடகங்களில் எழுதுபவர்கள் பலதரப்பட்டோர் இருக்கின்றனர். சமூக ஊடகங்களில் கணக்கு வைத்திருப்பது என்பது இன்றைய நாகரிக உலகின் அடையாளங்களில் ஒன்றாக ஆகிவிட்டதால் எல்லோருமே ஏதாவது சமூக ஊடகம் ஒன்றில் கணக்கு வைத்திருக்கத்தான் செய்கின்றனர். ஆனால், வலைப்பூ என்பது அப்படி இல்லை. அஃது எழுத்தார்வம் உள்ளவர்களுக்கென்றே நேர்ந்து விடப்பட்டது. உண்மையில், வலைப்பூ என்பதும் தொடக்கத்தில் சமூக ஊடகமாகத்தான் தொடங்கப்பட்டது என்றாலும், இன்று அதன் பயன்பாடு அப்படி இல்லை. சமூகத்துக்கு ஏதேனும் ஒரு கருத்தைச் சொல்ல விரும்புகிற எழுத்தார்வமுள்ள மனிதர்கள் மட்டுமே பயன்படுத்தும் கருவியாக உள்ளன வலைப்பூக்கள். எனவே ஒப்பீட்டளவில், சமூக ஊடகங்களில் எழுதுபவர்களை விட, பதிவுலகில் எழுதுபவர்களில் எழுத்துத்தரம் மிகுந்தவர்கள் எண்ணிக்கை கூடுதலாகத்தான் இருக்கிறது; இனியும் அப்படித்தான் இருக்கும்; அதுவே இயல்பு.

    பதிலளிநீக்கு
  22. வணக்கம்.

    தாங்கள் கொண்டு வந்த விவாதக்கருப்பொருளை பார்க்கும் போது.மகிழ்வு.
    முகநூல்-
    முகநூல் என்பது சமூகவலைத்தளங்களில் ஒன்று.நல்லதுக்கா நல்ல கருத்துக்களை சொல்லவேண்டிய முகநூலில் இன்று எதை பதியவேண்டும் எதைபதியக்கூடாது என்று தெரியாமால்.இருக்கிறார்கள்.
    கூகில் (வலைப்பூவில் )செய்யக்கூடிய விடயங்களை முகநூலில் செய்யமுடியது.முகநூல் என்ற ஒன்று வந்தவுடன் யார் எழுத்தாளர்கள் கவிஞர்கள் என்று இனம்காணமுடியாது.

    சிறந்த எழுத்தாளருக்கு சிறந்தது எதுவென்றால் வலைப்பூதான் இதைத்தான் நான் சொல்லமுடியும்.முகநூலில் எழுதுவது கடல்கரை மணலில் எழுதுவது போல.வலைப்பூ என்பது கல்லில் எழுதப்பட்ட எழுத்துப்போல.வரலாறு நிச்சயம் சொல்லும் வலைப்பூ பயன்படுத்துவதால் வலைப்பூவே சிறந்தது.

    கில்லர்ஜி சொன்ன கருத்துபோல வாடகைவீடு சொந்த வீடு.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  23. வலைப்பூ வாழைப்பூ போல நிறைய விற்காது , முகநூல் வாழைப்பழம் போல் விற்றுத்தீர்ந்துவிடும்

    பதிலளிநீக்கு
  24. வலைப்பூவில் நம் பதிவுகள் சேமிக்கப்பட்டிருக்கும். முகநூலிலும் இருக்கும் என்றாலும் தேடுவது கடினம். வலைப்பூவே என் விருப்பம்...இணைப்பினை மற்ற இடங்களில் பகிரலாம். நன்றி

    பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!