Translate Tamil to any languages.

செவ்வாய், 14 ஜூன், 2016

படித்துச் சுவைக்கச் சில பதிவுகள்

வலைப் பக்கம்
சில நாள்களாக வரமுடியவில்லை...
வலைப் பக்கம் வந்து பார்த்ததில்
சில பதிவுகள் என்னையும் ஈர்த்தன!
வலை வழியே
வழிகாட்டலும் மதியுரையும் வழங்கும் நான்,
இன்று வழிகாட்டலும் மதியுரையும்
வெளிக்கொணரும் பதிவுகளைத் தானே
உங்களுடன் பகிரலாமென எண்ணி வந்தேன்!

அமெரிக்காவில் வாழ்ந்தால் என்ன
ஆபிரிக்காவில் வாழ்ந்தால் என்ன
இந்தியாவில் வாழ்ந்தால் என்ன
ஈழத்தில் வாழ்ந்தால் என்ன
தமிழரின் முதலீடு
"கல்வி" என்ற ஒன்றே! - இதை
பெற்றோர் எண்ணிப் பார்த்து
பிள்ளைகளுக்குக் கல்வியை ஊட்டலாமே!
"உங்கள் குழந்தைகளைப் படிக்கவைப்பதைக்
குதூகலமாக ஆக்கிக்கொள்ள
இதோ 10 மிகச் சிறந்த வழிகள்." என்ற
பதிவைப் படித்தால் புரியும்
சிறார்களுக்கு
கல்வியை ஊட்டுவது எப்படியென...

காதலித்துப் பிரிந்தவர்கள் கூறும்     
"பள்ளிக் காதல் படலை வரை" என்பது
பொழுதுபோக்குச் செயல் முடிந்ததென்றா...
திருமணமாகிப் பிரிந்தவர்கள் கூறும்
"வர வர வாழ்க்கை கசக்குதையா" என்பது
உண்மையான உறவு உடைந்ததென்றா...
பொருந்திய உறவுகள் ஏனோ
பொருத்தம் இன்றி உடைவதோ
"பொருத்தமான வாழ்க்கைத்
துணைவரைத் தேர்ந்தெடுப்பது எப்படி?" என்ற
பதிவைப் படித்தால் புரியும்
இளசுகளுக்கு (காதலருக்கோ இணையருக்கோ)
எத்தனை பொருத்தம் தேவையென்றுணர...

தொலைபேசி இருந்த வேளை
அறியாத நோய்கள் எல்லாம்
திறன்பேசி வந்த வேளை
அறிய வைக்கப் பலருண்டு - அது பற்றி
சுவையூட்டி உணவுகள் சாவைத் தருமென...
நானுமொரு பதிவு இட்டிருந்தேன்
"பரோட்டா, பீட்சா சாப்பிட்டால்
மலக்குடல் புற்றுநோய்" என்று
நண்பர் ஒருவர் போட்டிருந்தார் - அதிலும்
கலக்கப்படும் கலவைகள் தானே
ஆளை முடிக்கும் உணவாக்கிறதே!
எதற்கும் ஒருக்கால் உண்ணுமுணவில்
நாங்கள்
அக்கறை காட்ட வேண்டுமெனில்...

உண்மை முகவரி அறியாது
முகநூல் பொத்தகத்தில் முகம்வைத்து
ஏமாறும் உள்ளங்களைப் போல
திறன்பேசி, இணையம் வழியே
பணக் கொடுக்கல் வாங்கல் செய்யும்
நம்மாளுங்க ஏமாறாமல் இருக்க
"ஆன்லைனில் பறிபோகும் பணம்...
வங்கிகளே உடந்தையா?" என்ற
பதிவைக் கொஞ்சம் படித்தால்
நீங்களும்
சரியான வழியில் செல்லலாமே...

நல்ல ஆள்களைப் பார்த்து
நம்ம ஆளுங்க திருந்தாவிட்டால்
நம்ம ஆளுங்க நல்ல ஆளில்லைங்க...
"பாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்" என
எங்கள் வலைப்பூவில் (Blog) வரும்
நல்ல ஆள்களைப் படித்தாவது
நம்ம ஆளுங்க நல்ல ஆளுங்க ஆவது
நன்மைகள்
வீட்டிற்கும் நாட்டிற்கும் வந்து சேரவே...

இப்படி ஐந்தாறு பதிவில
எப்படி நாம் வாழலாமென
அப்படியே சொல்லியிருக்கக் கண்டு
அப்படியே பொறுக்கி எடுத்த
வழிகாட்டலும் மதியுரையும் - என்றும்
எவருக்கும் பயன்தருமெனப் பகிருகிறேன்!

18 கருத்துகள் :

  1. வணக்கம் நண்பரே முனைவர் திரு. பி.ஜம்புலிங்கம், நண்பர் எங்கள் ப்ளாக் திரு. ஸ்ரீராம் ஆகிய பெருந்தகைகளோடு எம்மையும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "பரோட்டா, பீட்சா சாப்பிட்டால் மலக்குடல் புற்றுநோய்" என்ற செய்தியை வாசகர் படிக்க வேண்டுமெனத் தங்கள் பதிவை அறிமுகம் செய்தேன்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. "பாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்" என்ற தொடர் பதிவினை வாசகர் படிக்க வேண்டுமெனத் தங்கள் பதிவை அறிமுகம் செய்தேன்.

      நீக்கு
  3. நண்பர்கள் பதிவுகளோடு என் பதிவையும் அறிமுகப்படுத்தியமையறிந்து மகிழ்ச்சி.நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "குழந்தைகளைக் கம்யூட்டர் விளையாட்டுக்களிலிருந்தும், தொலைக்காட்சியிலிருந்தும் மீட்டுக் கொண்டுவர முடியவில்லை" என்ற செய்தியை வாசகர் படிக்க வேண்டுமெனத் தங்கள் பதிவை அறிமுகம் செய்தேன்.

      நீக்கு
  4. நண்பர்களின் பதிவுகளைக் காண்கையில் மனம் மகிழ்கிறது ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை வரவேற்கின்றேன்.
      மிக்க நன்றி.

      நீக்கு
  5. பகிர்வுக்கு நன்றிகள் யாழ்பாவாணன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை வரவேற்கின்றேன்.
      மிக்க நன்றி.

      நீக்கு
  6. சுவையான பதிவுகளை அறிமுகம் செய்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை வரவேற்கின்றேன்.
      மிக்க நன்றி.

      நீக்கு
  7. என்னுடைய தளத்தையும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "ஆன்லைனில் பறிபோகும் பணம்...
      வங்கிகளே உடந்தையா?" என்ற
      செய்தியை வாசகர் படிக்க வேண்டுமெனத் தங்கள் பதிவை எனது தளத்திலும் அறிமுகம் செய்தேன்.

      நீக்கு
  8. மிக்க நன்றி தொடர்பை பலப்படுத்தியமைக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை வரவேற்கின்றேன்.
      மிக்க நன்றி.

      நீக்கு
  9. அருமையான பகிர்வுகள் அனைவருக்கும் வாழ்த்துகள். நல்ல செயல் நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை வரவேற்கின்றேன்.
      மிக்க நன்றி.

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!