தமிழ்நாடு,
புதுக்கோட்டையில் நிகழ்ந்த வலைப்பதிவர் சந்திப்பு 2015 நிகழ்வைப் பற்றிப் பதிவர்கள்
பலர் எழுதிவிட்டனர். நானும் ஏதாவது எழுதி இருக்கலாமே எனச் சிலர் கருதி இருக்கலாம்.
"உலகெங்கும் தமிழ்ப் பதிவர் சந்திப்புப் பற்றிய தனி அடையாளத்தை நிலை நிறுத்திய
நிகழ்வு. இதனை இனிவரும் வலைப்பதிவர் சந்திப்புகளுக்கு முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளலாம்.
ஆனால், வலைப்பதிவர் சந்திப்பு 2015 நிகழ்வை விட இனிவரும் வலைப்பதிவர் சந்திப்புகள்
சிறப்பாக நடாத்தப்பட வேண்டும். அதேவேளை, உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண உதவும் எண்ணங்களைப்
பகிர வேண்டும்." என்பதே என் கருத்து, வலைப்பதிவர் சந்திப்பு 2015 நிகழ்வில் பகிர்ந்த
உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண உதவும் எண்ணங்களைப் பொறுக்கியே இப்பதிவை ஆக்கியுள்ளேன்.
முற்பகுதி
வலைப்பதிவர்
சந்திப்பு
என்ற
தளத்திலிருந்து
புதுக்கோட்டை
வலைப்பதிவர் திருவிழா காணொளிகள்
என்ற
பதிவிலிருந்து
11.10.2015
ஞாயிறு அன்று புதுக்கோட்டையில் நிகழ்ந்த வலைப்பதிவர் சந்திப்பு நிகழ்ச்சிகளை யூடியூப்பில்
பார்வையிட கீழே உள்ள, யூடியூப் முகவரிகளைச் சொடுக்குங்கள்.
முதற்
பகுதி ஒளிஒலி (வீடியோ) இனைப் பதிவிறக்கி விக்கிப்பீடியா கலைக்களஞ்சியதின் தமிழ்நாடு
திட்ட ஒருங்கிணைப்பாளர் அறிஞர் ரவிசங்கர் அவர்கள் புதுக்கோட்டையில் 11/10/2015 ஞாயிறு
அன்று நடைபெற்ற வலைப்பதிவர் சந்திப்பு நிகழ்விலே 'தமிழ் சோறு போடுமா?' என்று எடுத்துக்காட்டுடன்
விளக்கமளித்த பகுதியை வெட்டி எடுத்து உங்கள் முன் வைக்கின்றேன். இதற்கு அனுமதி வழங்கிய
வலைப்பதிவர் சந்திப்பு http://bloggersmeet2015.blogspot.com/ தள
மேலாளர்களுக்கு மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அறிஞர் ரவிசங்கர் அவர்களின் கருத்துகள்
தமிழ்நாட்டு
(தமிழக) மக்களுக்காகவோ
ஈழத்து
(இலங்கை) மக்களுக்காகவோ
வலைப்பதிவர்களுக்கு
மட்டுமோ
தெரிவித்ததாகக்
கருதாது
உலகெங்கும்
வாழும்
ஒவ்வொரு
தமிழருக்கும் தெரிவித்ததாகக் கருதி
உலகெங்கும்
நற்றமிழைப் பேண ஒன்றுபடுவோம்.
பிற்பகுதி
புதுக்கோட்டை
வலைப்பதிவர் சந்திப்பு 2015 நிகழ்வை 2015 ஐப்பசி பதினோராம் நாள் ஞாயிறு அன்று காலை
ஈழத்து யாழ்ப்பாணம் மாதகலூரில் இருந்தவாறு எனது மடிக்கணியில் நேரலை ஊடாகக் கண்டுகளித்தேன்.
வலைப்பதிவர் சந்திப்பு நிகழ்வு ஏற்பாடுகள் யாவும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இத்தனை சிறப்பாக ஏற்பாடு செய்த எல்லோருக்கும் பாராட்டுகள். நிகழ்வில் விக்கிப்பீடியா
கலைக்களஞ்சியதின் தமிழ்நாடு திட்ட ஒருங்கிணைப்பாளர் அறிஞர் ரவிசங்கர் அவர்கள் 'தமிழ்
சோறு போடுமா?' என்று எடுத்துக்காட்டுடன் விளக்கமளித்த கருத்துகள் என் உள்ளத்தில் வந்து
குந்திவிட்டன. அதன் விளைவு தான் கீழ்வரும் பதிவு. அதற்காக அறிஞர் ரவிசங்கர் அவர்களுக்கு
நன்றி கூறுகின்றேன்.
தமிழ் சோறு போடுமா என்றே
தமிழ் சோறு போடுமா
தமிழ் சோறு போடுமா என்றே
தமிழர் தான் பாடுறாங்க
இன்றே
(தமிழ்)
வழித்தோன்றல் வழிவந்து
வாழ்நாளில் பேசிநின்று
வழிநெடுக நடைபோட முயன்றால்
தமிழனென்று
ஆளுயர அறிவுயரத் தலைநிமிரத்
துணைநின்று
ஒத்துழைத்த தமிழைச் சோறுபோடு
என்கிறாயே!
நானும் தான் கேட்கிறேன்
இங்கே!
(தமிழ்)
சுற்றும் உலகில் பிறமொழி
பேசிநின்று
உலகம் சுற்றி வருகையில்
தமிழனென்று
வயிற்றை நிரப்ப வழியேதும்
இல்லையென்று
சோறு போடுமா தமிழென்று
கேட்கலாமோ?
நானும் தான் கேட்கிறேன்
இங்கே!
(தமிழ்)
பேருக்குத் தமிழனென்று
எப்போதும் சொல்லிநின்று
ஊருக்குள் தமிழர் பண்பாட்டை
உதறிநின்று
எவருக்குப் பிறமொழியில்
செயற்பட முன்நின்று
சோறு போடுமா தமிழென்று
குளறலாமோ?
நானும் தான் கேட்கிறேன்
இங்கே!
(தமிழ்)
நுட்பத் தெரிவுகளில் தமிழிருப்பது
ஏனென்று
கிட்ட நெருங்காது ஆங்கிலத்தின்
வழிநின்று
பிறரோடு நெருங்கினாலும்
வேற்றுமொழி நாடிநின்று
சோறு போடுமா தமிழென்று
முழங்கலாமோ?
நானும் தான் கேட்கிறேன்
இங்கே!
(தமிழ்)
பேச்சளவில் தான் தமிழனெனக்
கூறிநின்று
எழுத்தளவில் தான் தாய்த்தமிழை
மறவென்று
செயலளவில் தான் பண்பாட்டைத்
துறவென்று
சோறு போடுமா தமிழென்று
தூற்றலாமோ?
நானும் தான் கேட்கிறேன்
இங்கே!
(தமிழ்)
ஈன்ற தாயும் தமிழச்சி தானென்று
ஈன்ற பின்பேசப் பழக்கியது
தமிழென்று
தமிழ்த் தாயவள் ஊட்டிய
சோறின்று
சோறு போடுமா தமிழென்று
கேட்குமா?
நானும் தான் கேட்கிறேன்
இங்கே!
(தமிழ்)
தமிழா! உன்எழுத்தில் பிறமொழியை
நீக்கிநின்று
தமிழா! உன்சொல்லில் நற்றமிழைச்
சுட்டிநின்று
தமிழா! உன்பேச்சில் தேன்தமிழைக்
கொட்டிநின்று
தமிழா! உன்செயலில் பண்பாட்டைக்
காட்டிநின்று
வாழ்ந்து காட்டு; தாய்த்தமிழே
சோறுபோடுமே!
நானும் தான் சொல்லுகிறேன்
இங்கே!
(தமிழ்)
"தமிழ் சோறு போடுமா?"
என்றால் "தமிழ் சோறு போடும்" என்பது தான் பதில். அதெப்படி என்றால் அறிஞர்
சுப.நற்குணன், மலேசியா அவர்களின் பதிவுகளில் அவர் காட்டும் வழிகாட்டல் வழியே நாம் பயணித்தால்
கிட்டும்.
தமிழ் சோறு போட வேண்டுமா? (பகுதி 1)
தமிழ் சோறு போட வேண்டுமா? (பகுதி 2)
தமிழ் சோறு போட வேண்டுமா? (பகுதி 3)
முற்றும்
நல்ல பதிவு....
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கின்றேன்.
நீக்குமிக்க நன்றி
தமிழ் சோறு போடுமா? என்று கேட்பது
பதிலளிநீக்குபிள்ளைக்கு தாய் சோறு போடுவாளா? என்று கேட்பது போல் உள்ளது
பாலூட்டி சீராட்டி வளர்த்த தாய்க்கு பிள்ளை சோறு போடுகிறானா என்பது கேள்வியாக இருக்க வேண்டும் அய்யா!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
தங்கள் கருத்துக்கு மாற்றுக் கருத்தை
நீக்குஎன்னால் முன்வைக்க முடியாதுள்ளது.
ஆயினும்,
தமிழ் சோறு போடுமா? என்று கேட்டவாறு
பிள்ளைகள் பிறமொழியை நாடினால்
பாலூட்டிச் சீராட்டி வளர்த்த தாய்த்தமிழ்
எப்படிச் சோறு போடும் என்பதே
பதிவின் கருப்பொருள்!
பாலூட்டிச் சீராட்டி வளர்த்த தாய்க்கு
பிள்ளை சோறு போடுகிறானா என்பது
கேள்வியாக இருக்காமல்
ஒவ்வொரு தமிழ்ப் பிள்ளையும்
தாய்த்தமிழுக்குச் செய்ய வேண்டிய பணிகளையே
நானும் அலசியுள்ளேன். - நான்
இப்பதிவில் பகிர்ந்துள்ள
இரண்டு பெரிய அறிஞர்களின் பதிவுகளிலும்
அவர்கள் அதனையே உணர்த்துகின்றனர்!
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கின்றேன்.
மிக்க நன்றி
தமிழ்
பதிலளிநீக்குநமது அடையாளம் அன்றோ
அருமை ஐயா
நன்றி
தமிழர் நாம் தமிழைப் பேணினால்
நீக்குதமிழைப் படித்தேனும் - பிறர்
தமிழருடன் உறவைப் பேணுவர் - அப்ப
தமிழ் தானே
தமிழருக்குச் சோறு போடப்போகிறது!
தமிழ் சோறு போடுமா? போடும் என்பதே உண்மை. தாங்கள் சுட்டிய இணைப்புகளை நேரம் கிடைக்கும் போது சென்று படிக்கிறேன்.
பதிலளிநீக்கு// தமிழ் சோறு போடுமா என்றே
தமிழர் தான் பாடுறாங்க இன்றே //
தமிழர்கள் மட்டுமே தான் அய்யா! நன்றாகவே இடித்துரைத்தீர்கள்.
தமிழர் நாம் தமிழைப் பேணினால்
நீக்குதமிழைப் படித்தேனும் - பிறர்
தமிழருடன் உறவைப் பேணுவர் - அப்ப
தமிழ் தானே
தமிழருக்குச் சோறு போடப்போகிறது!
நம்மை நாமாக உருவகப்படுத்திக்கொள்ளவும், உருவாக்கவும் உதவும் நம் மொழி சோறு போடும்.
பதிலளிநீக்குதமிழர் நாம் தமிழைப் பேணினால்
நீக்குதமிழைப் படித்தேனும் - பிறர்
தமிழருடன் உறவைப் பேணுவர் - அப்ப
தமிழ் தானே
தமிழருக்குச் சோறு போடப்போகிறது!
அருமை ஐயா...
பதிலளிநீக்குநம் தளத்தில் இணைத்தாகி விட்டது... நன்றி...
இணைப்பு : →கலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்←
அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
கலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்
நீக்குhttp://bloggersmeet2015.blogspot.com/p/bloggersmeet2015.html
என்ற பதிவில் இணைத்துச் சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி.
தமிழர் நாம் தமிழைப் பேணினால்
தமிழைப் படித்தேனும் - பிறர்
தமிழருடன் உறவைப் பேணுவர் - அப்ப
தமிழ் தானே
தமிழருக்குச் சோறு போடப்போகிறது!
இந்திய கல்வியில் ஆங்கிலத்தைக் கொண்டுவந்து சேர்த்த பெருமை ஆங்கிலேயர் மெக்கலேயையே சேரும். ஆரம்பத்தில் இந்தியர்களை மிக கேவலமாக பேசிய மெக்காலே பின்னர் பிரிட்டீஷ் அரசுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில் 'இந்தியர்கள் மருத்துவம், கணிதம், வானவியல் போன்ற துறைகளில் தங்களுக்கென தனி தன்மையோடு பெரும் ஞானம் பெற்று விளங்குகிறார்கள். ஆனால், அவர்களிடம் ஆங்கிலம் உயர்ந்தது, ஆங்கிலேய நாகரிகம் சிறந்தது என்ற மாயை இருக்கிறது. இந்த மாயயை நாம் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என்றார். உண்மையில் தமிழை பேசுவது படிப்பது கேவலம் என்ற அளவுக்கு ஆங்கிலேயர்களுக்கு நம்மவர்கள் இன்னமும் விசுவாசமாக இருக்கிறார்கள்.
பதிலளிநீக்குநல்ல பதிவு!
தமிழர் நாம் தமிழைப் பேணினால்
நீக்குதமிழைப் படித்தேனும் - பிறர்
தமிழருடன் உறவைப் பேணுவர் - அப்ப
தமிழ் தானே
தமிழருக்குச் சோறு போடப்போகிறது!
நல்லதொரு பதிவு! நன்றி!
பதிலளிநீக்குதமிழர் நாம் தமிழைப் பேணினால்
நீக்குதமிழைப் படித்தேனும் - பிறர்
தமிழருடன் உறவைப் பேணுவர் - அப்ப
தமிழ் தானே
தமிழருக்குச் சோறு போடப்போகிறது!
நல்லதொரு பதிவு தமிழ் நமக்கு சோறு போடும் நண்பரே இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து வேண்டாம்
பதிலளிநீக்குதமிழர் நாம் தமிழைப் பேணினால்
நீக்குதமிழைப் படித்தேனும் - பிறர்
தமிழருடன் உறவைப் பேணுவர் - அப்ப
தமிழ் தானே
தமிழருக்குச் சோறு போடப்போகிறது!
தமிழ் சோறு போடும் ! சந்தேகமில்லை...நல்ல பதிவு நண்பரே!
பதிலளிநீக்குதமிழர் நாம் தமிழைப் பேணினால்
நீக்குதமிழைப் படித்தேனும் - பிறர்
தமிழருடன் உறவைப் பேணுவர் - அப்ப
தமிழ் தானே
தமிழருக்குச் சோறு போடப்போகிறது!
தமிழ் சோறு போடுமோ இல்லையோ, தமிழை வாடாமல் பாதுகாப்பது நம் பொறுப்பு!
பதிலளிநீக்கு:))
தமிழர் நாம் தமிழைப் பேணினால்
நீக்குதமிழைப் படித்தேனும் - பிறர்
தமிழருடன் உறவைப் பேணுவர் - அப்ப
தமிழ் தானே
தமிழருக்குச் சோறு போடப்போகிறது!
அருமையான பகிர்வு.
பதிலளிநீக்குதமிழர் நாம் தமிழைப் பேணினால்
நீக்குதமிழைப் படித்தேனும் - பிறர்
தமிழருடன் உறவைப் பேணுவர் - அப்ப
தமிழ் தானே
தமிழருக்குச் சோறு போடப்போகிறது!