Translate Tamil to any languages.

சனி, 24 அக்டோபர், 2015

எம் தமிழுக்குப் பிறந்த நாள் எந்நாளோ?



உலகைப் படைத்த ஆண்டவனே
வாழும் மக்களையும் படைத்தாரே!
மக்களைப் படைத்த ஆண்டவனே
பேசும்மொழி அறிவையும் ஊட்டினாரே!
அந்தப் பேசும்மொழி தான் - நாம்
நமக்குள்ளே உறவாட ஊடகமாச்சே!
அந்த மொழி எந்த மொழி - அதுவே
மொழிகளுக்குள் மூத்த மொழியாம்!
பிறந்த குழந்தையும் வெளிப்படுத்தும்
உணர்வுகளால் உருவான மொழியாம்!
அன்புடன் அம்மாவும் அணைத்து
பாலுடன் கலந்தூட்டிய மொழியாம்!
அப்பாவும் கையில் ஏந்தியே
அன்புகாட்டிய அந்த மொழியே 
எங்கள் தாய் மொழியாம் தமிழே!
நீங்கள் ஏற்பீரோ இல்லையோ - எவரும்
"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே
வாளொடு முன் தோன்றி மூத்த குடி" என்று
புறப்பொருள் வெண்பாமாலை சுட்டிய
அடிகளை அடிக்கடி படிப்பவரே!
அப்படியும் நம்பாவிட்டால் கேளும்
அகத்தியரை ஆக்கி அவருக்கே தமிழூட்டி
அகத்தியராலே மக்களும் தமிழைக் கற்றிட
முதற் கடவுள் சிவனார் முயன்றாரே!
தமிழ்க் கடவுள் முருகன் சொல்லி
அகத்தியர் ஆக்கிய தமிழ் இலக்கணமே
அகத்தியம் என்னும் முதல் நூலே!
அகத்தியம் பற்றி அறியாவிட்டாலும்
பிறமொழிக் கலப்பின்றிய இலக்கியமாய்
எழுத்து, சொல்லு, பொருளென மூவகை
இலக்கணம் தொல்காப்பியத்தில் உண்டே!
தொல்காப்பியருக்குப் பின்னே வந்த
பவணந்தியார் தானாக்கிய நன்நூலில்
"பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையினானே" என
வடமொழியைக் கொஞ்சம் பொறுக்கி
தமிழுக்குள் நுழைத்துக் கலக்கினாரே!
வணிகநோக்கிலும் புலம்பெயர்விலும்
உலகெங்கும் உலாவும் நம்மாளுங்க
ஆங்காங்கே படித்ததும் கேட்டதுமாய்
ஐயைந்து (5x5) மொழிக்கு மேலான
சொல்களைப் பொறுக்கி எடுத்தே
எங்கள் தாய் மொழியாம்
தமிழுக்கு உள்ளே நுழைத்து
கொஞ்சம் கொஞ்சமாய் கலக்கிறாங்க!
பிறமொழிக் கலப்பு இன்றிய
அன்றைய தமிழும் காலமாக
காலம் காலமாய்க் கலந்து
நுழைந்த மொழிகளால் தான்
இன்றைய தமிழும் தமிழின்றி
அடையாளம் இழந்து விட்டதே!
தமிழே தமிழாக இல்லாத
இன்றைய இழிமொழியை விரட்ட
பிறமொழிகளைத் தூக்கி எறி
பண்டைத் தமிழர் பேசிய
தொன்மைத் தமிழைக் கண்டுபிடி
நற்றமிழ் நம்மாளுங்க நாவாலே
வெளிப்படும் நாள் எந்நாளோ - அந்நாளே

எம் தமிழுக்குப் பிறந்த நாள்! 

24 கருத்துகள் :

  1. வணக்கம் அய்யா! தமிழே தமிழாக இல்லாத
    இன்றைய இழிமொழியை விரட்ட//வேண்டும் அய்யா! பிறமொழியை அல்லவா கட்டிகொண்டு அலைகிறோம்! ஆங்கிலம் கற்றால் தான் அறிவு வளருமாம் அய்யா! நன்றி!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தியாவிலே பாரதியருக்கு 32 மொழிகள் தெரியும்.
      ஈழத்திலே தனிநாயகம் அடிகளாருக்கு 18 மொழிகள் தெரியும்.
      ஆனால், அவர்கள் தமிழை வாழ வைத்தார்கள்.
      நம்மாளுங்க
      ஆங்கிலம் மட்டுமல்ல
      எத்தனை மொழியையும் படிக்கலாம்...
      ஆனால், அவற்றைத் தமிழுக்குள் கலக்காமல்
      தமிழை வாழ வைக்க வாருங்கள்
      என்று தானே அழைக்கின்றேன்!

      நீக்கு
  2. மூப்படைந்த் தாயை சிலர்
    சிலர் காப்பகத்திற்க்கு அனுப்புதல் போல்
    இந்த கலப்பு மேதைகளால்
    நம் தாய்தமிழையும் இனி காப்பகத்துள்தான்
    காண ஏலுமோ? கொடுமை அய்யா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பன்மொழி அறிவைப் பேணுவோம்
      ஆனால்,
      தமிழிற்குள் கலக்காமல் பேணுவோம்
      கலப்பின்றிய நற்றமிழே
      தமிழரின் அடையாளம்!

      நீக்கு
  3. நற்றமிழ் நம்மவர் நாவில் வெளிப்படும் நாளே
    பொன்னாள்
    அருமை
    உண்மை ஐயா நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பன்மொழி அறிவைப் பேணுவோம்
      ஆனால்,
      தமிழிற்குள் கலக்காமல் பேணுவோம்
      கலப்பின்றிய நற்றமிழே
      தமிழரின் அடையாளம்!

      நீக்கு
  4. தமிழில் பேசுவதும் படிப்பதும் உரையாடுவதும்கூட இப்போது பலருக்கு தீண்டத்தக்கதாக உள்ளதே. தாய்மொழியை மறந்துவிட்டு, தொலைத்துவிட்டு என்ன சாதிக்கப்போகிறோமோ தெரியவில்லை. வேதனையான நிகழ்வினைப் பகிர்ந்தமைக்கு நன்றி. தாய்மொழி சிந்தனை நம்மவர்களுக்கு வரும் நாளை விரைவில் எதிர்பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பன்மொழி அறிவைப் பேணுவோம்
      ஆனால்,
      தமிழிற்குள் கலக்காமல் பேணுவோம்
      கலப்பின்றிய நற்றமிழே
      தமிழரின் அடையாளம்!

      நீக்கு
  5. கலப்பின்றி நற்றமிழ் நம்மாளுங்க நாவாலே
    வெளிப்படும் நாள் எந்நாளோ - அந்நாளே--எம் தமிழுக்குப் பிறந்த நாள்..நன்றி!

    பதிலளிநீக்கு
  6. வணக்கம்
    அண்ணா

    தங்களின் குரலில் வாசிக்கப்பட்ட கவிதை மிக அற்புதாமாக உள்ளது.

    தமிழ் மொழி பேசுவது இப்போது அவமானம் என்று நினைக்கின்றார்கள் சிலர் அவர்கள் ஒன்றை உணர வேண்டும் தமிழ் அவமானம் இல்லை எமதுஅடையாளம்...

    முதலில் தமிழ் ஊடகங்கள் தமிழில் பேச வேண்டும் வேறுமொழி கலப்புடன் பல தொலைக்காட்சிகளில் பேசுகிறார்கள்.. இதைப்பார்த்துத்தான் வளர்ந்து வரும் சின்ன பிஞ்சுகளும் கடைப்பிடிக்கின்றார்கள்..... எப்போதும் தமிழில் பேசுவோம்... கவிதை மிக அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பன்மொழி அறிவைப் பேணுவோம்
      ஆனால்,
      தமிழிற்குள் கலக்காமல் பேணுவோம்
      கலப்பின்றிய நற்றமிழே
      தமிழரின் அடையாளம்!

      நீக்கு
  7. அருமை நண்பரே பிறமொழி கலக்காமல் தமிழ் பேசுதல் வேண்டும் பதிவுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பன்மொழி அறிவைப் பேணுவோம்
      ஆனால்,
      தமிழிற்குள் கலக்காமல் பேணுவோம்
      கலப்பின்றிய நற்றமிழே
      தமிழரின் அடையாளம்!

      நீக்கு
  8. தமிழ் நாட்டிலேயே தமிழ் பேசுவது இழிவாகிப் போய்விட்டது . தமிழ் கலாச்சாரம் ஒதுக்கப்படுகிறது இந்நிலையில் அந்நிய மொழிகளுக்கிடையே எம் எதிர்காலத தலைமுறைகளை நமது கலாச்சாரம் மொழி வாழ நாம் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றோம். மொழியில் பற்றில்லாதவர்களுக்கு இது உறைக்குள் போவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "மொழியில் பற்றில்லாதவர்களுக்கு இது உறைக்கப் போவதில்லை." என்பதை ஏற்றுக்கொள்கிறேன். என்றாலும் முயலுவோம்.

      பன்மொழி அறிவைப் பேணுவோம்
      ஆனால்,
      தமிழிற்குள் கலக்காமல் பேணுவோம்
      கலப்பின்றிய நற்றமிழே
      தமிழரின் அடையாளம்!

      நீக்கு
  9. //நற்றமிழ் நம்மாளுங்க நாவாலே
    வெளிப்படும் நாள் எந்நாளோ - அந்நாளே

    எம் தமிழுக்குப் பிறந்த நாள்! //

    உண்மை,உண்மை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பன்மொழி அறிவைப் பேணுவோம்
      ஆனால்,
      தமிழிற்குள் கலக்காமல் பேணுவோம்
      கலப்பின்றிய நற்றமிழே
      தமிழரின் அடையாளம்!

      நீக்கு
  10. நற்றமிழ் நம்மாளுங்க நாவாலே
    வெளிப்படும் நாள் எந்நாளோ - அந்நாளே

    எம் தமிழுக்குப் பிறந்த நாள்! // அருமையா சொன்னீங்க! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பன்மொழி அறிவைப் பேணுவோம்
      ஆனால்,
      தமிழிற்குள் கலக்காமல் பேணுவோம்
      கலப்பின்றிய நற்றமிழே
      தமிழரின் அடையாளம்!

      நீக்கு
  11. இறுதி வரிகள் நச்சென்று உள்ளது நண்பரே!

    எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் நாம் கற்கலாம் தவறில்லைதான். ஏனென்றால் நம் சூழல் அப்படி உள்ளதால். ஆனால் தமிழைக மறவாது போற்றி அதை வேற்று மொழிக் கலப்படமில்லாமல் பேசக் கற்போம். முயற்சி செய்வோம்...அருமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பன்மொழி அறிவைப் பேணுவோம்
      ஆனால்,
      தமிழிற்குள் கலக்காமல் பேணுவோம்
      கலப்பின்றிய நற்றமிழே
      தமிழரின் அடையாளம்!

      நீக்கு
  12. முயற்சிப்போம் நல்ல பதிவு.
    வாழ்த்தகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பன்மொழி அறிவைப் பேணுவோம்
      ஆனால்,
      தமிழிற்குள் கலக்காமல் பேணுவோம்
      கலப்பின்றிய நற்றமிழே
      தமிழரின் அடையாளம்!

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!