Translate Tamil to any languages.

வியாழன், 3 செப்டம்பர், 2015

தலைக்காப்பு அணிகலனும் ஆள்மாறாட்டமும்

இந்தியாவிலுள்ள தமிழ்நாடு மாநிலத்தில் ஆடி (ஜூலை) முதலாம் நாள் தொடக்கம் தலைக்காப்பு அணிகலன் (தலைக்கவசம்) கட்டாயம் என்ற சென்னை உயர்நீதிமன்றம் கட்டளைப்படி (உத்தரவுப்படி) தமிழக அரசு, தமிழ்நாட்டில் இருசில்லு ஊர்தி (வாகன) ஓட்டிகள் தலைக்காப்பு அணிகலன் (தலைக்கவசம்) கட்டாயம் அணிய வேண்டுமென அறிவிப்புச் செய்திருந்தது. நானும் அது பற்றி வலைப்பூக்களைப் படித்து அறிந்தேன்.

தலைக்காப்பு அணிகலன் (தலைக்கவசம்) அணியத் தவறினால், ஈருளிகளின் ஆவணங்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யடும் என்று தெரிவிக்கப்பட்டதால்; காவற்றுறையினரின் கண்காணிப்பை மேலுள்ள படத்தில் பார்க்கலாம்.


"குறிப்பு:- குறிப்பிட்ட விளம்பரத்தில் உள்ள காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஹெல்மட், தலையை முழுவதும் மறைத்துக் காப்பது போல் அல்லாது வெறுமனே தலையில் அணியும் சாதாரண தலைக்கவசம் என்பது போல் காட்சிப்படுத்த்ப்பட்டுள்ளது,சற்று நெருடலாக உள்ளது(இதற்கு சரியான படத்தை பயன்படுத்தி இருக்கலாம் -நன்றி திரு,கண்ணன் அவர்கள்.) எனினும் வாகனம் ஓட்டும் நண்பர்கள் தங்கள் தலையை முழுவதும் மூடுவது போல் உள்ள தலைக்கவசத்தை தேர்ந்தெடுத்து வாங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ஏனென்றால் தலைக்கவசம் உயிர்க்கவசம்.நன்றி!" என்றவாறு மேற்காணும் படத்தின் கீழ் குறிப்பிடப்பட்டிருந்தது
இணைப்பு:  http://www.thirumangalam.org/3164
மேற்படி வலைப்பூப் பதிவைப் படித்ததும் "தலையை முழுவதும் மூடுவது போல் உள்ள தலைக்காப்பு அணிகலன் (தலைக்கவசம்) அணிவது நல்லதா? கெட்டதா?" என்ற தலைப்பில் திண்டுக்கல் லியோணி அவர்கள் தலைமையில் ஊரூராகப் பட்டிமன்றம் நடத்தினால் நல்வருவாய் ஈட்டலாம் போலத் தெரிகிறதே! எனது ஈழத்து யாழ்ப்பணத்தில் இருந்து வெளிவரும் யாழ்-தினக்குரல் நாளேட்டில் "தலைக்காப்பு அணிகலன் (தலைக்கவசம்) அணிந்து சென்ற இரு இணையர்கள் மாறிப் பயணித்தனர்." என்ற செய்தியைக் கூட நான் படித்தேன்.

அதாவது, வெவ்வேறான இணையர்கள் ஒரே நிற ஈருளிகளில் ஒரே நிற ஆடை, ஒரே நிற தலைக்காப்பு அணிகலன் (தலைக்கவசம்) அணிந்து சென்றனர். ஓர் இடத்தில் குறித்த வெவ்வேறான இணையர்கள் ஈருளியை நிறுத்திவிட்டு பொருள் வேண்டச் சென்றிருந்தனர். பொருள் வேண்டச் சென்ற வேளை தமக்குள்ளேயும் பிரிந்து சென்றிருந்தனர்.  ஈற்றில் இணையும் வேளை கணவன்-மனைவி மாறுபட்டு வெவ்வேறான இணையர்களாகப் பயணித்தனராம். 

ஈருளிகளில் பயணித்துக்கொண்டு இருக்கையில் இணையர்கள் செல்லும் வழி, கதை, பேச்சு ஆகியவற்றை வைத்து தாம் தாம் தமக்குள்ளே மாறி ஏறிக் குந்தியிருப்பதை உணர்ந்தனராம். பின்னர் கறுப்புக் கண்ணாடி போட்ட தலைக்காப்பு அணிகலனைத் (தலைக்கவசத்தை) திறந்து ஆளை ஆள் நேரில் பார்த்து உண்மையை உறுதிப்படுத்தினராம்.

அடுத்ததாக நடைபேசியில் தத்தம் கணவர்-மனைவிக்கு அறிவிப்புப் பறந்ததாம். குறித்த இடத்தில் எல்லோரும் ஒன்றுகூடித் தத்தம் உண்மைத் துணையுடன் மீள இணைந்து தத்தம் வழியே தாம் பயணித்தனராம். முகத்தை மறைக்கும் கறுப்புக் கண்ணாடி போட்ட தலைக்காப்பு அணிகலனைப் (தலைக்கவசத்தை) பாவித்ததால் வந்த விளைவு என யாழ்-தினக்குரல் நாளேட்டில் குறிப்பிடப்பட்டிருப்பதைத் தங்களுடன் பகிர்ந்தேன். 

கறுப்புக் கண்ணாடி போட்ட தலைக்காப்பு அணிகலனைப் (தலைக்கவசத்தை) பாவித்து வங்கிக் கொள்ளைகள் மேற்கொள்வதாலும் பிற தவறுகளைச் செய்வதாலும் இலங்கையில் கறுப்புக் கண்ணாடி போட்ட தலைக்காப்பு அணிகலனுக்குத் (தலைக்கவசத்திற்கு) தடை போடப்பட்டிருக்கிறது. 

ஈருளிகளில் பயணித்துக்கொண்டு போகையில் உங்களால் விபத்து நிகழாது என்ற நம்பிக்கையில் பயணித்தாலும் பிறரால் விபத்து நிகழ வாய்ப்பு உண்டு என்பதை உணர்ந்து தலைக்காப்பு அணிகலனை (தலைக்கவசத்தை) மாட்டிய பின் தங்கள் ஈருளியான உந்துருளியில் முறுக்கி முந்திச் செல்லலாம் என்பதை மறக்க வேண்டாம். முகத்தை மறைக்கும் கறுப்புக் கண்ணாடிக்குப் பதிலாக முகத்தை வெளிக்காட்டும் மெல்லிய (Light) நிறக் கண்ணாடி போட்ட தலைக்காப்பு அணிகலனைப் (தலைக்கவசத்தை) பாவித்தால் பாதுகாப்பை உறுதிப்படுத்தலாம்.

யாழ்-தினக்குரல் நாளேட்டில் வெளிவந்த பகுதியைக் கீழே பார்க்கலாம்.

14 கருத்துகள் :

  1. பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  3. நல்லதொரு விளிப்புணர்வு விளக்கம் அருமை நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  5. தலைக்கவச சம்பவம் நல்லாத்தான் இருக்கிறது..தலைக்கவசம் அணிவதில் எமக்கு மாறுபட்ட கருத்து உள்ளது நண்பரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாறுபட்ட கருத்துகள் இருப்பின் பகிருவோம்.
      பயனர்கள் நல்லதைப் பாவிக்க வழிகாட்டுவோம்.
      மிக்க நன்றி.

      நீக்கு
  6. வணக்கம் !

    தலைக்கவசம் அணிதல் அவசியமானதுதான் ஆனாலும் யாழ் தினக்குரல் பொய்யான தகவலை உதாரணம் காட்டியதுதான் தாங்க முடியல்ல ...ஒரே நிறத்தில் ஈருருளிகளும் ஒரே நிறத்தில் ஆண் பெண் இணையர்களின் ஆடைகள் உயரங்கள் ..எல்லாம் எப்படி சாத்தியமாகும் ...ஐயோ ஐயோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் ஐயப்பாடுகள் ஏற்றுக்கொள்ளக் கூடியவை தான்.
      யாழ் தினக்குரல் பத்திரிகையில் வெளிவந்த பகுதியைப் படியெடுத்து இத்தளத்தில் பகிர முயற்சி செய்கிறேன்.

      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  7. ஒரே நிறத்தில் ஈருருளிகள் இருக்கலாம்.....ஒரே நிறத்தில் ஆடைகள்...?? அதுவும் கூட இருக்கலாம் ஆனால் ஒரே போன்ற ஆடைகள், நிறம் வேண்டுமானால் இருக்கலாம் இருந்தாலும் சாத்தியங்களு குறைவுதான்...

    என்றாலும் உங்கள் பதிவு நல்ல பதிவே. தலைக்காப்பு அணிகலனின் முதத்தை மறைக்கும் அந்தக் கண்ணாடி தேவை இல்லைதான்..உங்கள் இறுதிக் கருத்து நல்ல கருத்தே நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!