இலங்கைச் சிக்கலு(பிரச்சனை)க்குத் தீர்வாக எல்லா இனங்களும் மதங்களும் நிலப்பகுதி மேம்படுத்தல், கல்வி, தொழில் எல்லாவற்றிலும் சமவுரிமை பேணுவதோடு; அவ்வப்பகுதி மக்களே அவ்வப்பகுதியை ஆளும் உரிமையைக் கொண்டிருத்தல் என்பன உள்ளடக்கியதாக ஒரு தீர்வு இருப்பின் ஐக்கிய இலங்கைக்குள் எல்லோரும் மகிழ்வாக இருக்கலாமே!
சிறுபான்மை இனங்களை நசுக்கும் பேரினவாதிகளின் செயலால்; சிறுபான்மை இனங்களைக் காப்பாற்ற அவர்களுக்கெனத் தனிநாடு அமைத்துக் கொடுத்தால் நல்ல தீர்வாக அமையுமெனச் சிலர் கருதுகின்றனர். சிறுபான்மை இனங்கள் அதிகம் தமிழைப் பேசுவதால் அத்தனிநாட்டைத் தமிழீழம் என்கின்றனர்.
சிங்களப் போராளிக் குழுக்களான சேகுவாரா, ஜேவிபி மற்றும் தமிழ் போராளிக் குழுவான புலிகள் போன்றவற்றை ஒடுக்கிவிட்டதால், இனிப் போர் மூளாது என்ற முடிவுக்கு வர இயலாது. முதலாளித்துவ அரசை மாற்றி சோசலிச அரசை உருவாக்க முனையும் சிங்களப் போராளிக் குழுக்கள் மீளவும் உருவெடுக்கலாம். அதே போல தமிழ் போராளிக் குழுக்களும் உருவெடுக்கலாம்.
எனவே, அமைதியான இலங்கையைப் பேண; இலங்கைச் சிக்கலு(பிரச்சனை)க்கு நல்ல தீர்வு தேவைப்படுகிறது.
1. சரி, சிறுபான்மை இனங்கள் மகிழ்வாக வாழத் தமிழீழம் அமைக்க வாக்கெடுப்பு நடாத்தலாம்.
2. தவறு, ஐக்கிய இலங்கைக்குள் எல்லோரும் மகிழ்வாக இருக்கக்கூடிய தீர்வு அமைந்தால் போதுமே!
எந்தவொரு தீர்வானாலும் ஐக்கிய நாடுகள் சபை தான் முன்வைக்க வேண்டும். இல்லையேல் இலங்கையில் அமைதி தோன்ற வாய்ப்பில்லையே! இப்படி நான் எண்ணிப் பார்க்கிறேன். என்னால் என்னத்தைப் பண்ண இயலும்? எப்போதும் சிக்கலை(பிரச்சனையை) அலசுவதை விட தீர்வுகளை அலசுவது மேல். உங்கள் எண்ணத்தில் தோன்றும் தீர்வுகளை முன்வைத்தால், ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பி நடைமுறைப்படுத்த முயற்சி எடுக்கலாம்.
எனது தீர்வு ஒன்று மற்றைய வலைப்பூவில் இட்டிருக்கிறேன். கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் படிக்கவும்.
https://mhcd7.wordpress.com/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/
Translate Tamil to any languages. |
வியாழன், 12 மார்ச், 2015
இலங்கைச் சிக்கலு(பிரச்சனை)க்குத் தமிழீழம் அமைக்க வாக்கெடுப்பு நடாத்துவது சரியா? தவறா?
லேபிள்கள்:
2-கதை - கட்டுஉரை
ஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
அறிவுப் பூர்வமான ஆழ்ந்த ஆலோசனையில் எழுந்த கருத்தாக இதை பார்க்கிறேன்.
பதிலளிநீக்குதீர்வுகள் யாவும் தித்திப்பாக இருக்கட்டும்!
நல்ல தெளிந்த சிந்தனை அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
வாக்கெடுப்பு நடத்துவது சரி என்று தமிழீழத்து மக்கள் அனைவரும் சரி என்று குரல் கொடுத்தாலும் அவர்கள் நடத்தமாட்டார்கள் எனபதே உண்மை..........
பதிலளிநீக்குகாலம் தான் பதில் சொல்ல வேண்டும்!
நீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
மிக்க நன்றி.
வணக்கம்
பதிலளிநீக்குஅண்ணா
எலி வீடு என்றாலும் தனி வீடு நன்று..... அருமையான கருத்தை முன்வைத்துள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி த.ம 1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
மிக்க நன்றி.
தங்களது சிந்தனை நன்றுதான்! மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பது போல் மக்கள் முனைந்தால் முடியாதாகிவிடுமா நண்பரே! முயற்சி செய்வதில் தவறில்லையே!
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
நல்ல தீர்வு அமைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.நல்லது நடக்கும் என்று நம்புவோம்
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.