'விஜய்' தொலைக்காட்சி நடாத்திய சிறுவர்களுக்கான சிறப்புப் பாடகர் 4 (Super Singer Junior 4) நிகழ்வின் இறுதி நாள் (20/02/2015) நிகழ்வைப் பார்த்தேன். அந்நிகழ்விற்குத் தெரிவு செய்யப்பட்ட குழந்தைகளை பாராட்ட விரும்புகிறேன். அவர்களது ஆற்றலுக்குக் கிடைத்த பரிசாக இதனைக் கருதுகிறேன். இவர்கள் எல்லோரும் வெற்றியாளர்கள் என்பதை ஏற்றுக்கொள்வோம்.
விரும்பிகள் (இரசிகர்கள்) தெரிவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற சிறப்புப் பாடகர் (Super Singer) வெற்றியாளர்களைப் பாராட்டியே ஆகவேண்டும்.
சிறப்புப் பாடகர் (Super Singer) பாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற ஜெசிக்கா, வென்ற தங்கத்தின் ஒரு பகுதியைத் தமிழகத்தில் உள்ள அநாதைக் குழந்தைகளுக்கும் மீதியை ஈழத்தில் உள்ள அநாதைக் குழந்தைகளுக்கும் வழங்குவதாக அதே மேடையில் அவரும் அவரது தந்தையும் உறுதி அளித்திருந்தனர். அச்செயலால் உலகத் தமிழ் இனம் பெருமை கொள்ள முடிகிறது.
இந்த முன்மாதிரியை எல்லோரும் பின்பற்றினால் நன்று.
ஜெசிக்கா குடும்பத்தாரை வாழ்த்துகிறேன். ஆயினும் மிகப் பெரிய இப்பொது நிகழ்வில் இவ்வரங்கில் 'அநாதை' என்ற சொல்லுக்குப் பதிலாக 'ஆதரவற்றவர்' என்ற சொல்லைப் பாவித்திருக்கலாம் என்பது எனது பணிவான வேண்டுல். அது பற்றி அறியக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குங்கள்.
பெருமைப்படவேண்டிய செயல் வாழ்த்துவோம்.
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
வணக்கம்
பதிலளிநீக்குஅண்ணா
வெற்றியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
இரவு பார்த்தேன்...பகிர்வுக்கு நன்றி த.ம 1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
ஜெசிக்காதான் வெற்றி பெற்றவர்.....அவரது குணத்தால், செயலால்......அனாதை என்ற சொல்...ஆம் ஆதரவற்றவர் என்பது மிக உயரிய நாகரீகமான சொல்.....அருமை...
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.