படம்: கூகிள் தேடல்
கள்ளுக் கடைநாடத் தான் முடிகிறது...
கள்ளுக் குடிக்கையிலே
பாடத் தான் முடிகிறது...
கள்ளுக் குடித்த பின்
ஆடத் தான் முடிகிறது...
குடித்த கள்ளு வயிற்றில் புளிக்கையிலே
ஆங்காங்கே அவிழ்ந்த உடுப்புகளை
போடத் தான் முடிகிறது...
புளித்த கள்ளு தலைக்கேறுகையில்
நடுவழியிலே
படுத்துக் கிடக்கத் தான் முடிகிறது...
வயிற்றுக்குள்ளே போன
கள்ளமில்லா வெள்ளைக் கள்ளு
இத்தனையும் செய்விக்குமா?
"அப்பன் குடிச்சுப் போட்டு
உடுப்புகளை களைந்து போட்டு
கிடக்கின்ற நிலையை
கண்ட பெண்கள் காறித் துப்ப
கட்டியதிற்கு ஒறுப்பாக
அம்மா தோளிற் சுமந்து
வீட்டிற்கு இழுத்து வருவதைப் பார்" என்று
பிள்ளைகள்
நண்பர்களிடம் சொல்லிச் சிரிப்பதை
நம்மூர் நடுச் சந்தியில்
நீங்களும் கண்டு களித்தீர்களா?
சமூக அவலம் உண்மையை அழகாக கவிதையாய் வடித்தீர் (கள்) நண்பரே...
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
இதை அவர்(கள்) படிக்க வேண்டுமே!
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
தாங்கள் சொல்லிய அவலம் அன்று....இன்று?????????????
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
இந்த சமுதாயத்தின் கேடு விளைவிக்கும் ஒரு கேடான பழக்கம்....அழகான கருத்துள்ள கவிதை...
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
"கள்ளுக்கடை பக்கம் போகதே காலைப்பிடித்து கெஞ்சுகிறேன் " என்ற ஒரு ஈழத்து பொப் பாடல் 75 ஆம் ஆண்டளவில் வந்த ஞாபகம் ,,,,பகிர்வுக்கு நன்றிகள்
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
கள்ளுபோயி..........இன்று அம்மா சாராயம்...
பதிலளிநீக்குகாலம் மாறிப் போச்சு
நீக்குஉண்மையை உரைக்கும் கவிதை.
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.