Translate Tamil to any languages. |
சனி, 5 அக்டோபர், 2013
நம்மாளுகளைப் பார்த்து ஒழியும் கடவுள்...
பள்ளியில் கற்றது
"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்"
நம்மாளுகள் சொல்வது
"அன்னையும் பிதாவும் பின்னடிக்கு இடைஞ்சல்"
கண் கண்ட சான்றுகள்
"பிள்ளைகள் தம் பெற்றோரை
முதியோர் இல்லங்களில் ஒப்படைத்தல்"
அடிக்கடி நினைவில் தோன்றுவது
"காவோலை விழக் குருத்தோலை சிரிப்பது"
"முதுமையிலும் இளமை" இல்லத்தில்
பிள்ளைகள் தம் பெற்றோரை ஒப்படைக்கையிலே
"எங்களை - இங்கு
தள்ளி விட்ட குற்றத்திற்கு
உங்கட பிள்ளைகள்
உங்களுக்கு ஒறுப்புத் தந்தனரோ" என
பழம் பழசுகள் சொல்லிச் சிரித்தனர்!
இந்நிகழ்வுகளையோ
இந்நிலைமைகளையோ
பார்த்தால் அழவேண்டி வருமென அஞ்சித்தான்
எல்லோரையும் படைத்த ஆண்டவரே
மறைந்து நின்று பார்க்கிறார் போலும்!
லேபிள்கள்:
2-எளிமையான (புதுப்)பாக்கள்

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
வணக்கம்
பதிலளிநீக்குஇந்நிகழ்வுகளையோ
இந்நிலைமைகளையோ
பார்த்தால் அழவேண்டி வருமென அஞ்சித்தான்
எல்லோரையும் படைத்த ஆண்டவரே
மறைந்து நின்று பார்க்கிறார் போலும்
உண்மைதான் கவிதை நன்று வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் கருத்துக்கு நன்றி.
நீக்குவருத்தமான சங்கதிதான்
பதிலளிநீக்குநம்ம சூழலில் சில துயரங்கள் தொடர்வதை நிறுத்த முடியவில்லையே!
நீக்குஎப்ப தான் இந்நிலை மாறுமோ
பதிலளிநீக்குஎப்பனும் எனக்குப் புரியவில்லையே!