Translate Tamil to any languages.

ஞாயிறு, 31 மே, 2020

இணையவழிக் கற்றல், கற்பித்தல் (e-Learning N e-Teaching)


பொதுவாகக் கற்றல், கற்பித்தல் இரு வழிகளில் இடம்பெறும்.
1. ஆள்கள் ஊடாக... (பெற்றார், ஆசிரியர், நண்பர் ஊடாக...) : இங்கு கற்பிற்போர் ஒழுக்கம் பேணும் புனிதர்களாக இருக்க வேண்டும்.
2. ஊடகங்கள் ஊடாக... (அச்சேடுகள், வானொலி, தொலைக்காட்சி, இணையம் ஊடாக...) : எந்தவொரு ஊடகமும் கற்றலைத் தூண்டும் ஒழுக்கம் பேணத் தூண்டும் மக்கள் நல மேம்பாட்டிற்கு உதவும் கருவிகளாக இருக்க வேண்டும்.

2020 ஆம் ஆண்டு தொடக்கியதும் கொரோனா (COVID-19) வைரஸ் சீனாவிலிருந்து உலகெங்கும் பரவத் தொடங்கியது. கொரோனா (COVID-19) பல இழப்புகளைத் தந்திருந்தாலும் சில அறிவூட்டலையும் செய்திருக்கிறது. அதன் விளைவே இணையவழிக் கற்றல், கற்பித்தல் பற்றி அலசிப் பார்க்க வைத்திருக்கிறது.

1. கொரோனா (COVID-19) வைரஸ் காலத்திற்கு முந்தைய கல்வி.
(வகுப்பறைக் கல்வி, கடித மூலக் கல்வி, அரங்காற்றல் எனப் பல வழிகளில் கற்றோம்)

2. கொரோனா (COVID-19) வைரஸ் காலத்திற்கு பிந்தைய கல்வி.
(மூடுள்/ கூகிள் வகுப்பறைக் கல்வி, மின்னஞ்சல் மூலக் கல்வி, இணையக் கருத்தரங்கு எனப் பல வழிகளில் முயல்கிறோம்)

இணையம் தொடங்கிய காலத்தில் இருந்தே இணையவழிக் கற்றல், கற்பித்தல் இடம்பெற்று வருகிறது. இருப்பினும் கொரோனா (COVID-19) வைரஸ் காலத்திற்கு பின்னரே இணையவழிக் கற்றல், கற்பித்தல் பற்றிச் சிந்தித்துச் செயற்படுகிறோம். அதனைப் பற்றிய அறிஞர்களின் எண்ணங்களைப் படித்துப் பார்ப்போம்.

தமிழ்நாடு, சென்னை, தினமலர் 19/05/2020 செவ்வாய்க்கிழமை நாளேட்டில் (14, சிந்தனைக்களம் பக்கத்தில்) வெளியான பதிவிது.

இணையத்தின் வழி கற்றல்-கற்பித்தல் புதிய அணுகுமுறைகள்

What is the eLearning System?

மூடுள் வகுப்பறை (https://moodle.org/) உருவாக்கம், கூகிள் வகுப்பறை (Classroom.google.com) உருவாக்கம் பற்றிய விளக்கத்தினை முனைவர் இரா.குணசீலன் அவர்களின் வலையொளி (Youtube) பதிவுகள் ஊடாகத் தெரிந்து கொள்ளுங்கள்

மூடுள் வகுப்பறை உருவாக்கம்
கூகுள் வகுப்பறை உருவாக்கும் வழிகள்
ஆர்வமூட்டும் கூகுள் வகுப்பறைச் சூழல்

முதலாவதாக "மின் உள்ளடக்கம் / eContent" பற்றிப் பார்க்கலாம். வலை ஊடகங்களில் Text, Photo, Audio, Video, Screen Capture போன்ற  மின் உள்ளடக்கம் (eContent) பகிரப்படுகிறது. எடுத்துக்காட்டாக ஒன்றைப் Powerpoint இல் பயின்று பார்ப்போம்.
Text: எழுத்தில் விளக்கமளிக்கலாம்
Photo: படத்தில் விளக்கமளிக்கலாம்
Audio: குரலில் விளக்கமளிக்கலாம்
Video: ஒளியொலியாக/ காட்சியாக விளக்கமளிக்கலாம்
Screen Capture: கணினித் திரையைச் சிறைப்பிடித்து விளக்கமளிக்கலாம்.

அறிஞர் வினோத் ராஜனின் யாப்பிலக்கணச் செயலியைப் பாவித்து, நீங்களும் யாப்பிலக்கணம் கற்பிக்க முடியுமே!

கற்பித்தலுக்கான ஒளிஒலிப்பதிவு (Video)
     Screen Recorder
https://icecreamapps.com/Download-Screen-Recorder/   (5min மட்டும்)
https://www.freescreenrecording.com/       (No Limit)

மின்நூல் உருவாக்கமும் வெளியீடும்
https://pdfsam.org/download-pdfsam-basic/
https://calibre-ebook.com/download
https://icecreamapps.com/Download-Ebook-Reader/

மின்உள்ளடக்கங்களை எவ்வாறு பகிருவது?
WhatsApp, Viber, IMO, Telegram, and Social Sites
Web, Blog, Forum, Flickr, Sound cloud, YouTube, Mega Drive

குழு மின்னஞ்சல் வழி (Mailing List)
ஒரே நேரத்தில் பலருக்கு, சிறப்பு மின்னஞ்சலைப் பகிரும் முறை இதுவாகும்.

How To Build Your Email List With A Free Ecourse

Six best free email marketing services in a nutshell
SERVICE
SUBSCRIBER LIMIT
MONTHLY SEND LIMIT
DAILY SEND LIMIT
Unlimited
9,000
300
2,000
10,000
2,000
Unlimited
250
None
Unlimited
15,000
2,000
2,500
15,000
None
1,000
12,000
None

Reff: https://themeisle.com/blog/best-free-email-marketing-services/

இங்கு Mailchimp (mailchimp.com) நடைபேசி உட்பட எல்லாக் கருவிகளில் இயங்கும். அதனைக் கையாண்டு http://ootru.atwebpages.com/ தளத்தைப் பேண முயன்று பார்த்திருக்கிறேன்.

இணைய வழிக் கருத்தரங்கு
(Webinar – Web Based Seminar)

Google Meet - தற்போது gMail இல் ஓர் Option ஆக வருகிறது. இது gSuite இன் ஓர் அங்கம். பாடசாலை / ஆசிரியர் என்பதை உறுதிப்படுத்தி இலவசமாக gSuite ஐப் பாவிக்கும் போது Google Meet இல் Recording செய்யவும் முடியும். அதாவது, நடத்துநரின் (Organizer) gDrive இல் சேமிக்கும்.
Skype – Meet Now, TeamViewer, Cissco Webex, Zoom, EZTalks, Lifesize,
Meet_Jit_Si பற்றி எனது ஒளியொலிப் (Video) பதிவில் பார்க்க முடியும்.

இணையக் கலந்துரையாடலும் வெளியீடும்.

மேலுள்ள ஒளியும்ஒலியும் (Video) இல் வரும் தரவுகளையே  மேலே தொகுத்துத் தந்துள்ளேன்.



5 கருத்துகள் :

  1. நல்லதொரு செயல்... சிறப்பாக அமைய வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  2. சிறப்பான முயற்சியில் களமிறங்கியுள்ளீர்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. இணையவலை கல்வி இன்றைய காலசூழலில் அனைவருக்கும் மிகவும் பயன்படும் திட்டம். இதனால் ஒரு குறிபிட்ட துறையை மட்டுமல்லாது அனைத்து துறைகளை பற்றியும் அறிந்துகொள்ள உதவும்.

    பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!