Translate Tamil to any languages.

செவ்வாய், 19 மே, 2020

வலை ஊடகங்களும் கற்பிக்கும் ஆசிரியர்களும்

பலருக்கு அறிவூட்டும் செயல் கண்டு
உலகில் உயர்வான தொழில் என்று
ஆசிரியப் பணியைப் போற்றுவர்! - அந்த
ஆசிரியர்கள் எல்லோருக்கும் வணக்கம்!

முதலில் ஊடகங்கள் பற்றிச் சிந்திப்போம்.

நடிப்பு
அரங்கு
பார்த்தல்
பேச்சு
காற்று
கேட்டல்
எழுத்து
தாள்/திரை 
வாசித்தல்
எழுத்திப் பரப்பு  
ஏடுகள்
வாசித்தல்
ஒலிபரப்பு
ஒலிபெருக்கி/ வானொலி 
கேட்டல்
ஒளிபரப்பு
தொலைக்காட்சி/ திரைப்படம்
பார்த்தல்
உள்ளீடு
கணினி (மேம்படுத்தல்)
வெளியீடு
வெளியீடு
இணையம் (இணைத்துப் பேணுதல்) 
பயனீட்டல்

அதாவது, வெளியீட்டுக்கும் பயனீட்டலுக்கும் இடையிலான இடைமுகப்புத் தான் ஊடகம். ஊடகப் பணியில் ஈடுபடுவோர் ஊடகவியலாளர் எனலாம். ஊடகவியலாளரும் ஊடகங்களில் வெளியிடுவோரும் பயன்பெறுவோரைப் புண்படுத்தாமல் நடுநிலையாகச் செய்திகளையும் நல்லறிவையும் வெளியிடலாம். எவரும் தம்மைப் பற்றி வெளியிட்டாலும் மாற்றாரைப் பற்றி வெளியிடவோ மாற்றாருடையதை வெளியிடவோ மாற்றாரின் ஒப்புதல் (அனுமதி) பெறவேண்டும்.


கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு "ஏன் ஊடகங்களைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டும்?" என்ற கேள்வியை எவரும் முன்வைக்கலாம். வகுப்பறைக் கற்பித்தலைக் கடந்து ஊடகங்களூடாகவும் கற்பிக்க வேண்டிய தேவையைக் கொரோனா COVID - 19 வந்து உணர்த்தியிருக்கிறது. நல்லாசிரியர் எந்தவொரு ஊடகம் ஊடாகவும் எதனையும் கற்பிக்க முடியும். நாமிங்கு வலை ஊடகங்களில் கற்பிக்கத் தேவையான அடிபடை நுட்பங்களை அறிவோம்.

ஊடகங்களை அச்சு ஊடகங்கள், மின் ஊடகங்கள் என இரண்டாக வகுக்கலாம். நாளேடுகள், சஞ்சிகைகள், புத்தகங்கள் என்பன அச்சு ஊடகங்கள் என்றும் வானொலி, தொலைக்காட்சி, வலைத்தளங்கள் என்பன மின் ஊடகங்கள் என்றும் கருதப்படுகிறது. இவற்றினூடாக அன்றிலிருந்து இன்றுவரை கற்பித்தல் செயற்பாடு இடம்பெற்று வருகிறது. இருப்பினும் கொரோனா COVID - 19 வந்து இவற்றை மீட்டுப்பார்க்க வைத்திருக்கிறது.

வலைத்தளங்கள் சார்ந்த செயற்பாட்டையே வலையூடகங்கள் என நான் முன்வைக்கின்றேன். அதாவது வலைப்பக்கம் (Web Sites), வலைப்பூ (Blog), கருத்துக்களம் (Forum) என்பன முன்னிலை வகித்தாலும் இணையக் களஞ்சியங்களும் (Online Drives) துணைக்கு வரும். இணையக் களஞ்சியங்கள் என்றதும் ஒளிப்படம் (Photo), ஒலி/குரல் (Audio), ஒளியொலி (Video), பிற கோப்புகள் (Files) போன்றன சேமித்துப் பேணுமிடங்களே!

எடுத்துக்காட்டாகச் சிலவற்றைப் பார்த்தபின் தொடருவோம்.

வலைப்பக்கம் (Web Sites)
வலைப்பூ (Blog)
கருத்துக்களம் (Forum)
ஒளிப்படம் (Photo)
ஒலி/குரல் (Audio)
ஒளியொலி (Video)
கோப்புகள் (Files)

வலையூடகங்கள் என நான் சுட்டும் இந்த ஏழும் ஏதோ ஒரு வகையில் கற்பிக்க உதவுகிறது. இவற்றினூடாகக் கற்பிக்கத் தேவையானதைக் கற்றறிந்தால் நாங்களும் எத்தனையோ கற்பிக்க முடியும். Windows, MS-Office, Internet, Email, HTML ஆகியன அடிப்படைக்குத் தெரிந்தால் போதும். HTML நிகழ் நிரலாக்கம் (Programming) தெரியாவிட்டால் பரவாயில்லை. ஒளிப்பட வேலை (Photo Editor), குரல்திருத்த வேலை (Sound Editor), ஒலிஒளித்திருத்த வேலை (Video Editor) மென்பொருள்கள் கற்றிருந்தால் சிறப்பு.

இவற்றையும் கடந்து சிலவற்றைச் சொல்லித்தர விரும்புகிறேன்.
1. ஒருங்குகுறியைக் கையாளல்
2. கற்பித்தலுக்கான ஒலிப்பதிவு (Audio)
3. கற்பித்தலுக்கான ஒலிஒளிப்பதிவு (Video)
4. கலந்துரையாடலுக்கான ஒலிஒளிப்பதிவு (Video)
5. மின்நூல் உருவாக்கமும் வெளியீடும்
6. செயலிகள்

ஒருங்குகுறியைக் கையாளல்

Bamini (பாமினி) to Unicode (யுனிகோட்)

Unicode (யுனிகோட்)  to Bamini (பாமினி)

NHM Converter பயன்படுத்தல்
என்ற இணைப்பிற்குச் சென்று இம்மென்பொருளைப் பதிவிறக்கலாம்.

Tamil99 விசைப்பலகை ஊடாக நேரடியாகவே ஒருங்குகுறியில் (Unicode) தட்டச்சுச் செய்தல்.

என்ற இணைப்புகளிற்குச் சென்று இம்மென்பொருளைப் பதிவிறக்கலாம்.

குரல் மூலம் ஒருங்குகுறித் (Unicode) தட்டச்சு


கற்பித்தலுக்கான ஒலிப்பதிவு (Audio)
Windows ஊடாக Voice/Sound Recorder ஐப் பாவிக்கலாம்.

கற்பித்தலுக்கான ஒலிஒளிப்பதிவு (Video)
1.     Power Point
2.     Screen Recorder
https://icecreamapps.com/Download-Screen-Recorder/   (5min மட்டும்)
https://www.freescreenrecording.com/       (No Limit)


கற்பித்தலுக்கான ஒலிஒளிப்பதிவு (Video)
Zoom ஊடாக

மின்நூல் உருவாக்கமும் வெளியீடும்





செயலிகள்
1-வாணி

2-நாவி

3-சுளகு

4-அவலோகிதம் யாப்பு மென்பொருள்

5-அனுநாதம்

6-ஜினவாணி

7-அக்ஷரமுக

வலைவழி வெளியீடு செய்வோர் தெரிந்திருக்க வேண்டிய சின்னச் சின்ன நுட்பங்களைக் கூகிள் மீட் செயலி ஊடாக அறிமுகம் செய்த வேளை பயன்படுத்திய தகவலையும் ஓளிஒலித் (Video) தொகுப்பையும் பகிருகிறேன். தங்களுக்கான ஐயங்களைப் பின்னூட்டங்களில் கேளுங்கள். என்னால் பதிலளிக்க முடியும்.

10 கருத்துகள் :

  1. வணக்கம்
    அண்ணா

    எமது மொழியை வளர்க்க வேண்டும் என்ற சிந்தனை உணர்வோடு பலவகைப்பட்ட தலைப்புகளில் மிக அற்புதமாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள் எனது வாழ்த்துக்கள்
    தொடர்கிறேன் பதிவு

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    பதிலளிநீக்கு
  2. காலத்துக்கு ஏற்ற வகையில் இந்த பதிவை தந்திருக்கிறீர்கள். நன்றி

    பதிலளிநீக்கு
  3. ஆவ்வ்வ்வ்வ் ஒரு போஸ்ட்டில் எத்தனையோ தகவல்கள்... எல்லாமே பயனுள்ளவை... நோட் பண்ணிக் கொள்கிறேன் நன்றி.

    பதிலளிநீக்கு
  4. அருமையான தகவல்கள் நன்றி

    பதிலளிநீக்கு
  5. அருமையான காலத்திற்கு ஏற்ற பதிவுகள் நன்றிகள்

    பதிலளிநீக்கு
  6. Good to sharing I have read this post and in this post i got so many knowledge. Thanks for the posting.
    https://www.blissmarcom.com/

    பதிலளிநீக்கு
  7. உங்கள் இணையவழி கல்விப்பணியை பாராட்டியே ஆக வேண்டும் ... வாழ்த்துக்கள் ...

    பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!