Translate Tamil to any languages.

ஞாயிறு, 9 ஜூன், 2019

கழிநெடிலடி ஆசிரிய விருத்தப் பாக்கள்


அறுசீர் விருத்தம் (விளம், மா, விளம், மா, விளம், காய்)


1. பல நாட்டார் வருகைத் திருமணம்

நாளிதழ் வெளியிட் டும்படித் திருந்தேன்
                                                    நன்நிகழ் வதுநடக்க
நாடறிந் திராத ஆள்களும் நிகழ்வில்
                                                    நன்றிணை யவருகையாம்
ஐஞ்சுபத் துநாட்டில் தான்இருந் துமேசேர்ந்
                                                    இங்கிணைந் துமகிழவே
ஐங்கரன் அழகி சங்கவி தாம்சேர்ந்
                                                    இணையவூம் திருமணமாம்!

2. அழகுப்பெண்ணும் பெண்டாட்டியும்

அன்பெனும் அழகே உன்னையே எனக்குள்
                     அன்றிருந் துவிரும்ப
அன்பொழு கியேநான் பத்துபிள் ளைகள்
                     அன்றுநீர் பெற்றதாய்தான்
என்றுரைக் கத்தான் சொத்துகள் பறிக்க
                     என்னிடம் நெருக்கமாம்நீ
என்றுண ரென்று தீயாய் என்னவள்
                     எதிர்ப்பது சரியாமோ?

எழுசீர் விருத்தம் (விளம், மா, விளம், மா, விளம், விளம், மா)


1. கடவுள் வந்தால் உலகம் தாங்குமா?

என்றுமே கடவுள் தான்இருப் பதாக 
                          எண்ணுவம் நமதுநெஞ் சிலதான்
என்செய லும்பின் பிறர்செய லும்தான் 
                          என்கட வுள்எனத் தொடர
வெளியில கடவுள் ஏனென முழங்கும் 
                          வேறுசி லருமென எதிராம்
வெளியில கடவுள் தான்வர இருக்கும் 
                            வெளியில உலகமே வருமே!

2. இதுதாண்டா நரிமூளை (நரிப்புத்தி)!

சொன்னதும் எவரும் நம்பிவி டுவரா
                                 சொப்பன அழகிகள் தொடர
சொன்னவொ ருவழி மின்னும ழகென்ற
                                சொத்துகள் நிறைந்த எந்த
ஆணழ கரெவ ரையுமே நலமாய்
                                அண்டிய ணுகெனநான் விலக
ஆருமே தருமந் தக்கொடுப் பனவை
                               ஆளவெ னவறிய எவரோ!

எண்சீர் விருத்தம் (காய், காய், மா, தேமா, காய், காய், மா, தேமா)


1. எவரும் உலகைத் திருத்த வழிகாட்டலாம்

உலகைத்தான் நம்மனிதர் சீர்அ ழிக்க
              உலகைத்தான் யார்படைத்தான் யார்தான் கண்டார்
உலகைத்தான் மாற்றுவதாய் ஆளாள் போட்டி
              உலகைத்தான் மேம்படவைக் கத்தான் யாரோ
உலகம்தான் சீரழியா வண்ணம் யார்தான்
              உலகைக்காக் கத்தான்முன் வருவார் தானே
உலகம்மேம் பட்டால்தான் இருப்போம் நாமே
              உலகில்நாம் வென்றிடவாழ் வோம்தான் நேரே!

2. அகவைக் கோளாறும் நாட்டை அழிக்கலாம்.

அகவையெப்ப வும்எவருக் கும்இங் கெங்கு
          அங்கெனத்தான் ஈர்க்கும்தான் என்றும் பாரும்
அகவைக்குப் பொடிச்சிதானு யரவே தேடி
          அன்பனெனத் தனதுவயிற் றைநி ரப்ப
அகவைக்கா ரப்பொடியள் தான்கு டித்தும்
          ஆகிப்போய்க் கெட்டுவயி றும்தான் காய
அகவைக்கு ழப்பம்தான் மண்ணாக் கும்தான்
          அவ்வூரில் நல்லொழுக்கம் தான்பேண் நன்றே!

1 கருத்து :

  1. உங்கள் கவிதையை படிக்கும்போது மிகப்பெரிய தமிழ் பண்டிதர் போல் தோன்றுகிறதே !!!! வளர வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!