Translate Tamil to any languages.

ஞாயிறு, 27 மார்ச், 2016

கதை, கட்டுரை எழுதினால் இரண்டு இலட்சமா? - அருமையான போட்டி

உரூபா ஒரு இலட்சம் பரிசுத் தொகை கொண்ட உலகளாவிய சிறுகதைப் போட்டி மட்டுமல்ல, உரூபா ஒரு இலட்சம் பரிசுத் தொகை கொண்ட "தாயெனும் கோயில்" என்ற தலைப்பிலான உலகளாவிய மற்றொரு போட்டியும் உண்டு. இரண்டு போட்டிகளிலும் பங்கு பற்றி வெற்றி பெற்றால் ஆக மொத்தம் இரண்டு இலட்சம் கிடைக்குமே!

புதிய பதிவர்களுக்காக ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு ஊக்க மருந்தைத் தரலாம் என எண்ணுகிறேன்.

தேநீருக்கு எழுந்த வேளை...

நான் இடப்பெயர்வின் போது எனது பெற்றோரைப் பிரிந்து பிறிதொரு இடத்தில் வாழ்ந்தேன். அவ்விடத்தில் நானே தேநீர் ஊற்றிக் குடிக்க வேண்டிய நிலை. அதுவும் மாசிப் பனி மூசிப் பெய்கின்ற வேளை, காலையில் எழுவதே சிக்கல் அதாவது குளிர் என்னை வாட்டுமே!

குளிரை முறித்து எழுந்த வேளை பகலவன் வெறித்துக் காய்த்தான். எப்படியும் ஏழு மணி ஆகியிருக்கும். அடுப்பு மூட்டித் தேநீர் ஊற்றிக் குடிக்கையில் ஏழரை மணி ஆகியிருக்கும். எனக்கு இதெல்லாம் பெருந்துன்பம். என்னை ஈன்ற தாய், நாலரை மணிக்கு எழுந்து தேநீர் ஊற்றி என்னை ஐந்து மணிக்குப் படுக்கையாலே எழுப்பி ஊட்டிவிட்ட நாள்களை எண்ணிப் பார்க்கிறேன்.

நானுணர்ந்த பெருந்துன்பம் போல, என் தாயவள் எத்தனையோ பெருந்துன்பங்களை அடைந்திருப்பார். இப்படித் தான் 281 நாள்கள் வயிற்றில் சுமந்து, பின் 21 அகவை (வயது) ஆண் சிங்கம் ஆக்கும் வரை எத்தனை கோடி துன்பங்களை அடைந்திருப்பார். அந்தத் தாயை இந்தத் தேநீர் ஊற்றிக் குடிக்கையில் எண்ணிப் பார்க்கிறேன்.

இது "தாயெனும் கோயில்" என்ற போட்டிக்கான ஊக்க மருந்து. இப்படி உங்கள் தாயன்பை வைத்து A-4 அளவு காகிதத்தில் மூன்று முதல் நான்கு பக்கங்களுக்குள் தமிழில் எழுதி அனுப்பலாம் தானே!

தெருவீதியில் ஆணொருவரைப் பெண்ணொருவள் அடிக்கின்றாள். பின் அமைதியாக இருவரும் பிரிந்து செல்கின்றனர். இந்தக் காட்சியை உள்ளத்தில் வைத்து எழும் எண்ணங்களைத் தொகுத்துக் கதை ஒன்றைப் புனைந்து பாருங்கள்.

அடித்தாள்; படித்தான்!

அந்தப் பள்ளிக்கூட வீதியால போனால் தான் என் வீட்டுக்கு விரைவாகப் போகலாம். என்னூருக்கு அந்த வீதியால எந்த ஊர்திகளும் போவதில்லை. நடைப் பயணம் தான் ஒரே வழி!

இனியென்ன நடப்போமென நடந்து வருகையிலே; கூப்பிடு தூரத்தில ஓர் அழகான சிவப்பி பொது நிறப் பொடியனுக்கு மூஞ்சியைப் பொத்தி அடிப்பதைக் கண்டேன். ஆமை வேகத்தில நடந்த நான், உடனடியாகத் தகவலறியும் நோக்கில் முயல் வேகத்தில நடந்தேன்.

என் உள்ளத்தில் தோன்றியதைச் சொன்னேன். அதற்கு நீங்கள் நடு வீதியில இப்படி அடிக்கலாமா? என்றவாறு அழாக்குறையாக அவன் அவளிடம் சொல்கிறான். அவ்வேளை நானும் அவர்களுக்குக் கிட்ட நெருங்கி விட்டேன்.

காதலிக்கிறியா? என நடு வீதியில கேட்டதிற்குத் தான் அடித்தேன். படித்து உழைத்து வருவாய் கிட்டிய வேளை வா, என்னோடு இணைந்து பிழைக்கலாம். அப்ப தான் உன்னில எனக்கும் விருப்பம் வரும். அதை அடிக்கடி நினைவூட்டவே, சுடச் சுட இந்த இடத்திலேயே இப்படி அடித்தேன் என்று சொல்லியவாறு அவள் அவ்விடத்தை விட்டு அகன்றாள்.

சரி! சரி! நானும் படித்து உழைக்கத் தொடங்கியதும் உங்களைத் தொடருவேனென்று அவனும் அங்கால நகர்ந்தான். அவள் அடித்ததால, இவன் படிச்சிட்டான் போல, அதுதான் அமைதியாக ஆளை ஆள் பிரிந்து செல்வதாக நானும் எண்ணிப்பார்த்தேன்.

இந்தக் காலத்தில இப்படியான இளசுகளைக் காண்பது அரிது தான். என்ர காலத்தில என்ர ஆள் என்னைத் துரத்தித் துரத்தி என்ர வீட்டிற்கே வந்திட்டாள். பிறகு, என்ர அம்மா எனக்குக் கட்டி வைச்சிட்டார். இல்லாள் உலையில அரிசி போட, என்னைத் தேடப்போறாளென அரிசியும் கையுமா வீட்டிற்கு விரைவாய் நடந்தேன்.

இது உலகளாவிய சிறுகதைப் போட்டிக்கான ஊக்க மருந்து. இப்படி ஏதாவது ஒரு காட்சியை வைத்து A-4 அளவு காகிதத்தில் கையெழுத்துப் பிரதியானால், பத்து முதல் பன்னிரண்டு பக்கங்கள் வரை தமிழ் மொழியில் சிறுகதை எழுதி அனுப்பலாம் தானே!

இனி இப்போட்டிகளில் பங்குபற்றத் தாங்கள் தயார் தானே! நானும் உங்களுடன் போட்டியில் பங்கெடுப்பேன். போட்டி ஒழுங்கு முறைகளைப் படித்துப் போட்டியில் பங்குபற்றி பரிசில் பெற வாழ்த்துகிறேன்.

அறிஞர் பரிவை சே.குமார் முதலில் வெளிப்படுத்த
அடுத்து, அவர் சுட்டிய 'சும்மா' தளத்தில் படித்து
பின் மேலதிகத் தேடலில் வீனஸ்தமிழ் தளத்தில் அறிந்து
"புதினம்"
'ஈழகேசரி' வெளியீட்டு நிறுவனத்துக்காக
20 ஆண்டுகளாக வெளிவரும்
லண்டன் தமிழர்களின் அபிமான இலவச இதழ்
ஆசிரியர்: ஈ.கே.ராஜகோபால்.
மின்னஞ்சல் முகவரி: editor@londonputhinam.co.uk
என்ற தகவலிலுள்ள மின்னஞ்சல் முகவரி ஊடாக நானும் போட்டியில் பங்கு பற்றுவதோடு எனது வலைப்பூ உறவுகளுடன் பகிரவும் போட்டி விரிப்பை அனுப்பி உதவுமாறு கேட்ட போது; அவர்கள் அனுப்பிய படியைத் தங்களுடன் பகிருகிறேன்.பதிவிறக்கிக்கொள்ள கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.


14 கருத்துகள் :

 1. போட்டி சிறக்கட்டும் ஐயா
  தாங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. தகவலுக்கு நன்றி! தாங்கள் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 3. பங்கு கொள்ளப் போகிறவர்களுக்கும், வெற்றி பெறப் போகிறவர்களுக்கும் முன்னதான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 4. போட்டியில் பங்கு பெறப் போகிறவர்களுக்கு எங்கள் வாழ்த்துகள். நல்லதோர் வாய்ப்புதான். பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே! இதை நாங்கள் சும்மா தளத்தில் பார்த்தோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
   மிக்க நன்றி.

   நீக்கு
 5. சொக்கா..அந்த 2 லட்சத்தையும் எனக்கே கொடுக்க கூடாதா?
  எனக்கில்ல..எனக்கில்ல...
  ஐயோ.. 2 லட்சம் ஆச்சே..
  சொக்கா..ஆஆஆஆஆஆ....!


  பதிலளிநீக்கு
 6. மிக்க நன்றி.
  http://easyhappylifemaker.blogspot.in/2016/04/umask-2015-easy-tamil-keyboard-layout.html

  பதிலளிநீக்கு
 7. ஐயா.
  வணக்கம்...
  தங்களின் உன்னத எண்ணம் தந்த "புதினம் " நடத்தும் போட்டிகள் பற்றி அறியும் வாய்ப்பும், கலந்து கொள்ளும் வரமும் கிடைக்க பெற்றேன்.
  தன்னலம் இல்லா தங்கள் எண்ணங்களுக்கு தலை வணங்குகிறோம்...
  போட்டி முடிவுகள் வந்து விட்டனவா ஐயா.
  வாழ்த்துக்கள்... ப்ராத்தனைகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புதினம் சஞ்சிகையில் வெளிவந்ததும் தங்களுக்கு அறியத் தருகின்றேன்

   நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!