Translate Tamil to any languages.

திங்கள், 14 மார்ச், 2016

ஓடு பிறமொழியே - தமிழை வாழவிடு!

தமிழை நேசிப்போம்!, தமிழில் பேசுவோம்!
என்று
வெளிநாட்டவர் முழங்கின்றார் - இங்கே
நம்மாளுங்க
வெளிநாட்டவர் மொழிகளையே பேசுகின்றார்!

உலகெங்கும் தமிழ் பேண விருப்பும்
தமிழ் உறவுகளே - தமிழுக்குள்ளே
வடமொழிச் சொல்களைக் கலக்காதீங்க!
அதெப்படி முடியும்...?
தமிழ் சொல் எது?
வடமொழிச் (சமஸ்கிருதச்) சொல் எது?
என்றறியாமல்
அகப்பட்ட பிறபொழிச் சொல்லையும்
அள்ளிக் கிள்ளிப் பூசி மெழுகி
தமிழென்று உளறுகின்ற நம்மாளுங்க
எப்படித் தான்
வடமொழிச் சொல்களைக் கலக்காதிருப்பாங்க?

நடைமுறையில் (சென்னையில்) பேசப்படும்
ஆங்கிலச் சொல்களுக்கான தமிழ்ச் சொல்களை
அறிஞர் மணவை முஸ்தபா அவர்கள்
பொத்தகமாக அச்சிட்டு வெளியிட்டும்
தமிழிலில் இருந்து ஆங்கிலத்தை
வெளியெற்ற முடியாத நம்மாளுங்க
எந்தப் பொத்தகத்தைப் படித்துப் போட்டு
தமிழிலில் இருந்து வடமொழியை (சமஸ்கிருதத்தை) 
வெளியெற்ற முன்வருவாங்க என்கிறியளா?

"வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம்" என்ற
மின்நூலைத் தான் அழகாக வெளிப்படுத்தும்
"விருபா தமிழ் புத்தகத் தகவல் திரட்டு" என்ற
இணையப் பக்கத்தைப் படித்துப் படித்து
தமிழில் உலாவும் வடமொழிச் சொல்களை
இயன்றவரை தூக்கியெறிய முடியாதா?
பறக்க வேண்டும் என்றெண்ணும்
நம்மாளுங்களுக்குக் கூட
காற்றுக் கூடச் சிறகாக முளைக்காதா?
நம்பிக்கை தான் உயிர் என்பேன்!

அறிஞர் மணவை முஸ்தபா அவர்கள் தொகுத்த
ஆங்கிலம் - தமிழ்ச் சொல்களை படித்தேனும்
அறிஞர் நீலாம்பிகையம்மையார் தொகுத்த
வடசொல் தமிழ் அகரமுதலியைப் படித்தேனும்
தமிழுக்குள்ளே உலாவும் பிறபொழிச் சொல்களை
"ஓடு பிறமொழியே - எப்பன்
எங்கள் செந்தமிழை வாழவிடு!" என்று
தமிழிலில் இருந்து வெளியேற்ற முன்வாருங்கள்!


மேலே குறிப்பிட்ட அறிஞர் மணவை முஸ்தபா அவர்களின் மின்நூல் இணைப்பு இருப்பின் பின்னூட்டத்தில் தந்துதவுங்கள். தளத்தில் அறிமுகம் செய்ய உதவும்.

12 கருத்துகள் :

  1. நல்ல பகிர்வு. மணவை முஸ்தபா அவர்களுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  2. அறிஞர் மணவை முஸ்தபா அவர்களுக்கும் அறிஞர் நீலாம்பிகையம்மையார் அவர்களுக்கும் நன்றிகள்பல.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  3. Great.The researchers in USA had come to the conclution that the entier languages of the world must have originated from some language and that could be TAMIL.Thanks for the Blog.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  6. தமிழ் எழுப்பிழைகளை திருத்துவதன் அடுத்த கட்டமாக பிற மொழிச் சொற்களை இணை தமிழ்ச் சொற்களாக மாற்றுவதற்கு மென்பொருள் செய்திடல் வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி ஒரு செயலியை நானும் ஆக்கி வெளியிட உள்ளேன்.
      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!