Translate Tamil to any languages.

திங்கள், 25 நவம்பர், 2019

சிரிப்போம் சிந்திப்போம்



சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கும் ஒரே இலக்கியம் நகைச்சுவை ஆகும். ஓர் உண்மையைக் கொஞ்சம் கூட்டியோ குறைத்தோ எழுதும் போது நகைச்சுவை மலரும். எழுதுகோல் ஏந்திய உங்களுக்கு, நகைச்சுவை எழுதுவது இலகுவாக அமையும். முயன்றால் முடியாதது ஏதுமில்லை.

1.
பெண்: உங்கள் அழகும் எடுப்பும் என்னை விரும்பத் தூண்டுதே!

ஆண்: இல்லாள் அறிந்தால், அகப்பைக் காம்பாலே அடிப்பாளே!

2.
ஆண்: அவனைத் தான் கட்டுவேனெனக் கட்டினாய்! முதலிரவுக்கு முன்னமே ஓடி வந்திட்டியேடி!

பெண்: அவர் போட்டிருந்த நகை போலி, பாவித்த ஊர்த்திகள் வாடகைக்குப் பெற்றவை, இருக்கிற வீடும் வாடகையாம், அதேவேளை ஆளுக்கு வருவாயும் இல்லையே!

3.
ஒருவர்: ஒரு காலத்திலே ஊரே உனக்குப் பின்னாலே அலைந்துதே! இப்ப ஒரு நாயும் கூட உனக்குப் பின்னாலே வருவதில்லையே!

மற்றவர்: நானோ அரைச் சதத்திற்கு வழியின்றி அலைவதை அறிந்திட்டினம் போல...

இவை மூன்றும் எனது புனைவு. முதலாவதில் ஆளை அறியாது விரும்புவது தவறென்பதையும் இரண்டாவதில் வெளித்தோற்றத்தை நம்பி ஏமாறக்கூடாது என்பதையும் மூன்றாவதில் பணமுள்ளவரை தான் உறவு என்பதையும் உணர்த்த முயன்றிருக்கிறேன். வாசித்த பின், சிந்தித்த பின், சிரிக்கும் போதே இவை மூன்றும் உணர முடியும். இனி இவற்றை விடச் சிறந்த நகைச்சுவைகளை உங்களாலும் எழுத முடியுமென நம்புகின்றேன்.

இழுப்பு

கிழடு: முடி கொட்டி வழுக்கை விழுந்து
படியேறி இறங்க முடியாமல்
நரம்புகள் சுருங்கிப் போய்
உடலுறுப்புகள் இயங்காத நிலையில
என்பின்னால் அலைந்து வருவதேன்?

குமரி: வழுக்கை விழுந்தாலும் வருவாய் குறையாதே!
நரம்புகள் சுருங்கினாலும் ஆயுள் குறையாதே!
நீர் நலமாக வாழத் தான் நானிருப்பேன் - உன்னை
தோள் கொடுத்து நிமிர்த்துவேன் நானே!
உள்ளம் கோணாமல் உதவலாம் தானே!

கிழடு: கட்டையிலே போற எனக்கு
உருகிற சட்டைக்காரியே - உன்
இழுப்பு என்னவென்று அறியேனே!

குமரி: தெருவழியே தேயும் பெட்டை நான் - உன்
வருவாயில் நனையலாமென நாடினேன் பார்!
என்னை இழுத்து அணையுங்களேன்!

கிழடு: அடியே! ஏமாளி! - நானோ
தெருப் பிச்சைக்காரன் அறியாயோ...
பணப் போதை தான்
என்னை இழுப்புச் செய்யத் தூண்டியதோ!

4 கருத்துகள் :

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!