Translate Tamil to any languages.

ஞாயிறு, 11 அக்டோபர், 2015

உயரத்திற்கு ஏற்ற நிறையைக் கணிக்கும் செயலி

அந்தக் காலத்தில ஒருவர் நூறாண்டுகளுக்கு மேலே இளமைத் துள்ளலுடன் வாழ்ந்துள்ளார். இந்தக் காலத்தில ஒருவர் ஐம்பதுக்கு மேலேயே முதுமைத் தள்ளாடலுடன் வாழ்ந்துகொண்டிருப்பதைக் காணலாம். இதற்கெல்லாம் உண்ணும் உணவே காரணமாம்.

அந்தக் காலத்தில மூக்குமுட்டத் திண்டுபோட்டு நீட்டி நிமிர்ந்து தூங்கி எழுந்து வாழ்ந்தே நூறில இளமையை வெளிப்படுத்தினார்கள். அவர்கள் உண்டது தானிய வகைகள், பச்சை இலைக் கறியோட, அவியற் குழம்பு, ஒடியற் கூழ், பனாட்டு எனப் பல. கண்டதைத் திண்டாலும் இரும்பு போல அந்தக் காலத்து ஆள்கள் இருந்தவையாம்.

இந்தக் காலத்திலயும் மூக்குமுட்டத் திண்டுபோட்டு நீட்டி நிமிர்ந்து தூங்கி எழுந்து வாழ்ந்தே ஐம்பதில முதுமையை வெளிப்படுத்திறாங்க. இவர்கள் உண்பது தெருக் கடைகளில விரும்பிய (வணிக) உணவுகள், அரிசி, மாவுப் பண்டங்களுடன் எண்ணெய்ச் சட்டியில போட்டெடுத்த உணவுகளே! கண்டதைத் திண்டாலும் முருக்குப் பருத்துத் தூணுக்கு உதவாதது போல இந்தக் காலத்து ஆள்கள் இருப்பதைக் காணலாம்.

இப்ப தங்களுக்கு எத்தனை அகவை, ஆண்டு, மாதம், நாள் எல்லாம் கணிப்பீர்களா? ஏன் தெரியுமா? இப்ப இருந்தே உயரத்திற்கு ஏற்ற நிறையைப் பேண முயன்றால் தான் நெடுநாள் வாழலாம். அப்படியாயின் கீழ்வரும் செயலியைப் பாவித்து முதலில் தங்கள் அகவையைக் காணுங்கள்.


இச்செயலியைத் தங்கள் தளத்தில் பாவிக்கக் கீழ்வரும் நிகழ்நிரலைப் (Code) படியெடுத்து (Copy) ஒட்டலாம் (Paste).

<iframe border="0" frameborder="0" height="370" marginheight="1" marginwidth="1" name="myage" src="http://www.yarlsoft.com/adg/ys_wdgts/ys_age_calcu.php" width="440"> Your browser does not support Iframes. </iframe><br />

மூக்குமுட்டத் திண்டுபோட்டு உடற்பயிற்சி செய்யாமல் ஆனைக்குட்டி போல இருப்பதாலும் முறையான சமச்சீர் உணவுண்ணாமல் எலும்புந் தோலுமாய்ச் சாவாரைப் போல இருப்பதாலும் நோய்கள் தான் தேடி வரும். தேடி வரும் நோய்களை வீரட்ட சமச்சீர் உணவுண்டு உடற்பயிற்சி செய்யவும் வேண்டும். அவரவர் தத்தம் உயரத்திற்கு ஏற்ற நிறையைப் பேணவும் வேண்டும். அப்ப தான் உடல் நலம் பேணலாம்.

 உயர்குருதி அமுக்கும், நீரிழிவு, கொலஸ்ரோல் போன்ற பல நோய்களுக்குக் காரணமே உயரத்திற்கு ஏற்ற நிறை அமையாமையே! அந்த உயரத்திற்கு ஏற்ற நிறையைக் கணிக்க ஒரு வலைச் செயலியை அமைத்துள்ளேன். கீழுள்ள இணைப்பைச் சொடுக்கி உங்கள் உயரத்திற்கு ஏற்ற நிறையைக் கணித்துப் பாருங்களேன். வழமைக்கு மாறாக நிறை குறைந்தோ கூடியோ இருப்பின் தங்கள் குடும்ப மருத்துவரிடம் மதியுரை (ஆலோசனை) பெறவும்.


இச்செயலியைத் தங்கள் தளத்தில் பாவிக்கக் கீழ்வரும் நிகழ்நிரலைப் (Code) படியெடுத்து (Copy) ஒட்டலாம் (Paste).
<iframe border="0" frameborder="0" height="320" marginheight="1" marginwidth="1" name="mybmi" src="http://www.yarlsoft.com/adg/ys_wdgts/ys_bmi_calcu.php" width="435"> Your browser does not support Iframes. </iframe><br />

'உயரத்திற்கு ஏற்ற நிறை' பற்றிய விரிவான அறிவைப் பெற கீழுள்ள இணைப்புகளைப் படிக்கவும்.

உடல் திணிவுச்சுட்டி உடல் பருமன்
http://tamil.happylife.lk/?page_id=153
உங்கள் உடல்நிறையைக் குறைத்துக்கொள்வது எப்படி? http://www.thamilhealth.com/2014/04/08/
உடல்நிறை-குறைப்பு-ஒரு-இல/ நல்ல உணவும் குப்பை உணவும்
http://sinnutasty.blogspot.com/2012_03_01_archive.html

இப்பதிவின் ஊடாக நான் ஆக்கிய இரு செயலிகளை உங்களுடன் பகிருகிறேன். எப்படித் தங்கள் தளங்களில் வலைச்செயலிகளை (விட்ஜட்ஸ்) இணைப்பது பற்றி எனது மற்றைய தளத்தில் விளக்கமளிக்கவே எடுத்துக்காட்டாக இவற்றை ஆக்கினேன். மேலதிகத் தகவலுக்கு: http://www.yarlsoft.com/adg/bmi_calculator.php

12 கருத்துகள் :

  1. அடடே பயனுள்ள பதிவு நண்பரே நன்றி

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்

    அற்புதமான தகவல் திரட்டு பகிர்ந்தமைக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. பயனுள்ள பகிர்வு. இதை எடுத்துப் பார்த்தோமானால் கட்டாயம் இருக்க வேண்டிய அளவை விட அதிகமாகத்தான் இருப்போம்! ஏற்கெனவே எடுத்தும் பார்த்திருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  4. பயனுள்ள பதிவு ஐயா
    பயன் படுத்திக் கொள்கின்றேன்
    நன்றி

    பதிலளிநீக்கு
  5. நல்லதொரு பயனுள்ள பகிர்வு! பயன்படுத்திப் பார்க்க வேண்டும். ஏற்கனவே அறிந்த ஒன்று என்றாலும்..

    பதிலளிநீக்கு
  6. செயலி வேலை செய்யவில்லையே நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இணைக்கப்பட்ட செயலிகள் எனது www.yarlsoft.com சேவரில் சேமிக்கப்பட்டிருக்கிறது. தற்காலிகமாகக் குறித்த சேவர் இயங்காத வேளை செயலிகள் இயங்காது இருக்கலாம். ஆயினும், ஏனைய நேரங்களில் இயங்குமே!
      பிறிதொரு தடவை முயற்சித்துப் பாருங்கள்!
      மிக்க நன்றி.

      நீக்கு
  7. thanks for sharing very informative post , really helpful post for mental therapy.
    best psychologist in india

    பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!